முகப்பு

2.6 தொகுப்புரை

இவ்வலகில், நால்வகைச்சொற்கள், வேற்றுமை உருபுகள், பகுபதம், பகாப்பதம், தொடர்வகைகள், துணைவினைகள், கூட்டுவினைகள் ஆகியவை தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. கற்பித்தல் பணியில் ஈடுபடும் மாணவ ஆசிரியருக்கு இவ்விலக்கணப்பகுதிகள் பெரும் துணைபுரியும். அவர்கள் தமிழ் இலக்கண அறிவை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
  1. பதம் என்றால் என்ன?
  2. பதம் எத்தனை வகைப்படும்? அவையாவை?
  3. பகுபதத்தின் உறுப்புகள் யாவை? சான்று தருக.
  4. பகாபதத்தின் வகைகள் யாவை?
  5. தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?
  6. தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?
  7. துணைவினைகளின் பண்புகள் யாவை?