முகப்பு

4.0 பாட முன்னுரை

பாட முன்னுரை

வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும், பொதுமக்களும் பேசும் மொழியை மனிதன் கற்றுக்கொள்கிறான். வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும், பொதுமக்களும் மொழியைப் பிழையின்றிச் சரியாகப் பயன்படுத்தினால், மொழியில் பிழைகள் தோன்றா. வேற்றுமொழிப் பற்று, பொறுப்பின்மை, சோம்பல், தாய்மொழிப் பற்றின்மை முதலிய காரணங்களால் மொழியை மக்கள் பிழைபட பேசியும் எழுதியும் வருகின்றனர். எனவே, மொழியைப் பிழையின்றி எழுதவும், அன்றாட வாழ்வில் மொழிப் பயன்பாட்டை மேம்படுத்தவும் மாணவ ஆசிரியர்கள் அறிந்திருத்தல் வேண்டும். இவ்வலகில் பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும், ஒற்றுப்பிழை, தொடர் அமைப்பு ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கற்கும் மாணவ ஆசிரியர் மொழியைப் பிழையின்றி எழுதவும், பேசவும், கற்பிக்கவும் இயலும்.