முகப்பு

4.6 தொகுப்புரை

தொகுப்புரை

இக்கால இலக்கண மரபும் தொடரமைப்பும் எனும் இவ்வலகில், இக்கால இலக்கணத்தின் பயன்பாடு பற்றியும் தேவை பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. தொடர் அமைப்பும் விளக்கப்பட்டுள்ளது.

படிநிலை இலக்கணங்கள் தோன்றினால் தான் இலக்கண அறிவும் இலக்கண ஆராய்ச்சியும் வளரமுடியும். அத்தகைய வளர்ச்சிக்கு உதவும் வகையில், தொடக்கநிலை மாணவர்களுக்கென்றும், உயர்நிலை மாணவர்களுக்கென்றும், மேல்நிலை மாணவர்களுக்கென்றும் தனி இலக்கணம் அமைதல் வேண்டும். இவை மட்டுமல்லாமல், எல்லாருக்கும் பயன்படத்தக்க வகையில், சொற்பொருள் விளங்காதபோது, அகராதியைப் பயன்படுத்துவது போல, மொழியில் நமக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்கிக்கொள்ளத் தக்க வகையில் நோக்குநிலை இலக்கணம் தமிழில் தோன்ற வேண்டும். யார்க்கு ஐயம் ஏற்பட்டாலும் அவர்கள் ஐயத்தைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் அகர வரிசையில் செய்திகளை வழங்குகின்ற ஒரு நோக்குநிலை இலக்கணமும் தமிழுக்குத் தேவை.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
  1. தமிழில் எழுதும்போது எவ்விதமான பிழைகள் ஏற்படுகின்றன?
  2. வல்லினம் மிகும் இடம் குறிப்பு தருக.
  3. வல்லினம் மிகா இடம் குறிப்பு தருக.
  4. வாக்கியம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
  5. வாக்கியத்தை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
  6. கருத்துவகை வாக்கியம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
  7. அமைப்பு வாக்கியத்தின் வகைகள் யாவை?