விலங்குகள், பறவைகள், பொருட்கள், தொழில்கள் முதலியவற்றைக் குறித்துக்காட்ட, தமிழர் வழிவழியாகப் பல சொற்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அச்சொற்கள் தமிழ் மொழியின் பண்பையும், தமிழரின் நாகரிகத்தையும் உணர்த்துகின்றன.
எ.கா.
- ஆண் குரங்கை கடுவன் எனவும், பெண் குரங்கை மந்தி எனவும் கூறுவது தமிழ் மரபாகும்.
- ஆண் குரங்கை Male Monkey எனவும், பெண் குரங்கை Female Monkey எனவும் கூறுவது ஆங்கில மரபாகும்.
சொல்வளம் மிக்க தமிழில் எண்ணற்ற மரபுச்சொற்களும் மரபுத் தொடர்களும் உள்ளன. ஒரு மொழியில் உள்ள மரபுத் தொடர்களை அப்படியே வேறொரு மொழியில் மொழி பெயர்ப்பது கடினம். சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் அம்மரபுத்தொடரின் பொருள் மாறிவிடும். எனவே, ஒரு மொழியின் மரபுத்தன்மையை அறிந்து மொழி பெயர்க்க வேண்டும்.
எ.கா.
He Kicked the bucket – என்பதை, “அவன் வாளியை உதைத்தான்” என மொழிபெயர்த்தால், அது தவறான மொழி பெயர்ப்பு ஆகும். “அவன் இறந்துவிட்டான்” என்பதே இத்தொடர் உணர்த்தும் பொருளாகும். எனவே, மரபுச்சொல் / மரபுத்தொடர் என்பது, சொற்றொடர் வேறாகவும், அச்சொற்றொடர் உணர்த்தும் கருத்து வேறாகவும் இருக்கும்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியர், தாம் இயற்றிய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ‘மரபியல்’ என்னும் ஓர் இயலையே உருவாக்கியுள்ளார். இதன் வாயிலாக, அவருடைய காலத்திற்கு முன் வாழ்ந்த மக்களும் தொன்றுதொட்டு மரபுச் சொற்களையும் தொடர்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர் என அறியமுடிகிறது. எனவே, நம் முன்னோர்களால் தொன்றுதொட்டு வழங்கி வந்த தொடர்களை நாமும் பயன்படுத்துவதால், அவை மரபுத்தொடர் எனப்படுகின்றன.
சில மரபுச் சொற்களையும் தொடர்களையும் இங்குக் காண்போம்
1. விலங்குகளின் இளமைப்பெயர்கள்
வ.எண்
|
இளம் விலங்குகளைக் குறிக்கும் மரபுச் சொற்கள்
|
எடுத்துக்காட்டுகள்
|
1 |
குட்டி |
நாய்க்குட்டி, குதிரைக்குட்டி, ஆட்டுக்குட்டி, பன்றிக்குட்டி |
2 |
கன்று |
பசுக்கன்று, எருமைக்கன்று |
3 |
பிள்ளை |
அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை |
4 |
குஞ்சு |
எலிக்குஞ்சு, மீன் குஞ்சு |
5 |
பறழ் |
புலிப்பறழ் |
6 |
குருளை |
சிங்கக்குருளை |
2. பறவைகளின் இளமைப்பெயர்கள்
வ.எண்
|
இளம் பறவைகளைக் குறிக்கும் மரபுச் சொற்கள்
|
எடுத்துக்காட்டுகள்
|
1 |
குஞ்சு |
கோழிக்குஞ்சு, காக்கைக்குஞ்சு |
2 |
பிள்ளை |
கிளிப்பிள்ளை |
3. காய்களின் இளமைப் பெயர்கள்
வ.எண்
|
காய்களின் இளமையைக் குறிக்கும் மரபுச் சொற்கள்
|
எடுத்துக்காட்டுகள்
|
1 |
பிஞ்சு |
அவரைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப் பிஞ்சு |
2 |
வடு |
மாவடு |
3 |
குரும்பை |
தென்னங்குரும்பை, பனங்குரும்பை |
4 |
கச்சல் |
வாழைக்கச்சல் |
4. இலைகளைக் குறிக்கும் மரபுச் சொற்கள்
வ.எண்
|
இலைகளைக் குறிக்கும் மரபுச் சொற்கள்
|
எடுத்துக்காட்டுகள்
|
1 |
ஓலை |
தென்னைஓலை, பனை ஓலை |
2 |
சோகை |
கரும்புச்சோகை |
3 |
தட்டை |
சோளத்தட்டை, கம்பந்தட்டை |
4 |
கீரை |
முருங்கைக்கீரை |
5. விலங்குகள் தங்கும் இடத்தைக் குறிக்கும் மரபுச் சொற்கள்
வ.எண்
|
விலங்குகள் தங்கும் இடம்
|
எடுத்துக்காட்டுகள்
|
1 |
கொட்டில் |
குதிரைக்கொட்டில் |
2 |
தொழுவம் |
மாட்டுத்தொழுவம் |
3 |
கூடம் |
யானைக்கூடம் |
4 |
குகை |
சிங்கக்குகை |
4 |
பட்டி |
ஆட்டுப்பட்டி |
6. பறவைகள் தங்கும் இடத்தைக் குறிக்கும் மரபுச்சொற்கள்
வ.எண்
|
பறவைகள் தங்கும் இடத்தைக் குறிக்கும் மரபுச் சொற்கள்
|
எடுத்துக்காட்டுகள்
|
1 |
பண்ணை |
கோழிப்பண்ணை, வாத்துப்பண்ணை |
2 |
பொந்து |
கிளிப்பொந்து |
3 |
கூடு |
குருவிக்கூடு |
7. கூட்டத்தைக் குறிக்கும் மரபுச்சொற்கள்
வ.எண்
|
கூட்டத்தைக் குறிக்கும் மரபுச் சொற்கள்
|
எடுத்துக்காட்டுகள்
|
1 |
மந்தை |
ஆட்டுமந்தை, மாட்டுமந்தை |
2 |
குவியல் |
கற்குவியல், நெற்குவியல் |
3 |
கூட்டம் |
மக்கள் கூட்டம், படைக்கூட்டம் |
4 |
தோப்பு |
புளியந்தோப்பு, மாந்தோப்பு, தென்னந்தோப்பு |
5 |
தோட்டம் |
வாழைத்தோட்டம், கரும்புத்தோட்டம் |
8. விலங்குகளின் ஒலி மரபுச் சொற்கள்
வ.எண்
|
விலங்குகளின் ஒலி மரபுச் சொற்கள்
|
எடுத்துக்காட்டுகள்
|
1 |
எக்காளமிடுதல் |
எருது எக்காளமிடும் |
2 |
கத்துதல் |
கழுதை கத்தும் |
3 |
கனைத்தல் |
குதிரைக் கனைக்கும் |
4 |
முழங்குதல் |
சிங்கம் முழங்கும் |
5 |
ஊளையிடுதல் |
நரி ஊளையிடும் |
6
|
குரைத்தல் |
நாய் குரைக்கும் |
7 |
உறுமுதல் |
புலி உறுமும் |
8 |
பிளிறுதல் |
யானை பிளிறும் |
9 |
சீறுதல் |
பாம்பு சீறும் |
9. பறவைகளின் ஒலி மரபுச் சொற்கள்
வ.எண்
|
பறவைகளின் ஒலி மரபுச் சொற்கள்
|
எடுத்துக்காட்டுகள்
|
1 |
அலறுதல் |
ஆந்தை அலறும் |
2 |
கத்துதல் |
காகம் கரையும் |
3 |
பேசுதல் |
கிளி பேசும் |
4 |
கூவுதல் |
குயில் கூவும் |
5 |
குழறுதல் |
கூகை குழறும் |
6
|
கொக்கரித்தல் |
கோழி கொக்கரிக்கும் |
7 |
அகவுதல் |
மயில் அகவும் |
8 |
முரலுதல் |
வண்டு முரலும் |
10. செயல் அல்லது வினை மரபுச் சொற்கள்
வ.எண்
|
செயல் அல்லது வினை மரபுச் சொற்கள்
|
எடுத்துக்காட்டுகள்
|
1 |
உண்ணல் |
உணவு உண்டான் |
2 |
தின்னல் |
முறுக்குத் தின்றான் |
3 |
பருகல் |
பால் பருகினான் |
4 |
நக்கல் |
தேனை நக்கினான் |
5 |
குடித்தல் |
நீர் குடித்தான் |
6
|
அருந்துதல் |
தேநீர் அருந்தினான் |
7 |
வரைதல் |
ஓவியம் வரைந்தான் |
8 |
தீட்டுதல் |
வண்ணம் தீட்டினான் |
9 |
இயற்றுதல் |
செய்யுள் இயற்றினான் |
10 |
பாடுதல் |
பாடல் பாடினான் |
11 |
வனைதல் |
குடம் வனைந்தான் |
12 |
முடைதல் |
கூடை முடைந்தான் |
13 |
வேய்தல் |
கூரை வேய்ந்தான் |
14 |
பின்னுதல் |
பாய் பின்னுதல் |
15 |
எழுப்புதல் |
சுவர் எழுப்பினார் |
16 |
நெய்தல் |
ஆடை நெய்தார் |
17 |
உழுதல் |
நிலத்தை உழுதார் |
18 |
வெட்டுதல் |
கிணறு வெட்டினார் |
19 |
விழுங்குதல் |
மாத்திரை விழுங்கினார் |
20 |
அணிதல் |
ஆடை அணிந்தார் |
மரபுத்தொடர்
|
விளக்கம்
|
அவசரக் குடுக்கை
|
சிந்திக்காமல் செயல் செய்தல்
|
ஆயிரங்காலத்துப் பயிர்
|
நீண்டநாள் வாழ்தல்
|
உலை வைத்தல்
|
கெடுதல் செய்தல்
|
எடுப்பார் கைப்பிள்ளை
|
யார் எதைச்சொன்னாலும் செய்தல்
|
ஏட்டுச் சுரைக்காய்
|
நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகள்
|
ஓலை கிழிந்தது
|
வேலை போய்விட்டது
|
கயிறு திரிக்கிறான்
|
பொய் பேசுகிறான்
|
மலையேறி விட்டது
|
காலம் மாற்றம் அடைந்துவிட்டது
|
முதலைக்கண்ணீர்
|
பொய்யான அழுகை
|
கொடி கட்டிப் பறந்தான்
|
பெருமையாக வாழ்ந்தான்
|
கோட்டை விட்டான்
|
ஏமாற்றம் அடைந்தான்
|
முட்டுக்கட்டை
|
தடையாக இருத்தல்
|
குதிரைக்கொம்பு
|
கிடைத்தற்கரியது
|
தலையாட்டி பொம்மை
|
எதற்கும் இணங்கி நடப்பது
|