முகப்பு |
மூங்கில் (கழை, வேய்) |
7. பாலை |
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப, |
||
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக் |
||
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப, |
||
5 |
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் |
|
இன்னே பெய்ய மின்னுமால்-தோழி! |
||
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை |
||
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும் |
||
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே. |
உரை | |
பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய,ஆற்றாளாய தலைவிக்குத்தோழிசொல்லியது.-நல்வெள்ளியார்
|
28. பாலை |
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும், |
||
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும். |
||
அன்னை போல இனிய கூறியும், |
||
கள்வர் போலக் கொடியன்மாதோ- |
||
5 |
மணி என இழிதரும் அருவி, பொன் என |
|
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து, |
||
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில் |
||
ஓடு மழை கிழிக்கும் சென்னி, |
||
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே! |
உரை | |
பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம்.-முதுகூற்றனார்
|
46. பாலை |
வைகல்தோறும் இன்பமும் இளமையும் |
||
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து; |
||
காணீர் என்றலோ அரிதே; அது நனி |
||
பேணீர் ஆகுவிர்-ஐய! என் தோழி |
||
5 |
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர் |
|
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி, |
||
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர, |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து, |
||
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து, |
||
10 |
நன் வாய் அல்லா வாழ்க்கை |
|
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே. |
உரை | |
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.
|
51. குறிஞ்சி |
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக் |
||
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று |
||
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல் |
||
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப் |
||
5 |
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு |
|
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென, |
||
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே; |
||
பெருந் தண் குளவி குழைத்த பா அடி, |
||
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு |
||
10 |
பேதை ஆசினி ஒசித்த |
|
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே? |
உரை | |
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்
|
62. பாலை |
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை |
||
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன |
||
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து, |
||
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து, |
||
5 |
உள்ளினென் அல்லெனோ யானே-'முள் எயிற்று, |
|
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல், |
||
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள், |
||
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப |
||
உலவை ஆகிய மரத்த |
||
10 |
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே? |
உரை |
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.-இளங்கீரனார்
|
82. குறிஞ்சி |
நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த |
||
வேய் வனப்புற்ற தோளை நீயே, |
||
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி! |
||
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின் |
||
5 |
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- |
|
போகிய நாகப் போக்கு அருங் கவலை, |
||
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல் |
||
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண, |
||
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ, |
||
10 |
கோள் நாய் கொண்ட கொள்ளைக் |
|
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே. |
உரை | |
தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.-அம்மூவனார்
|
85. குறிஞ்சி |
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும், |
||
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும், |
||
அம்பல் மூதூர் அரவம் ஆயினும், |
||
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக் |
||
5 |
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், |
|
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி |
||
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
||
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை, |
||
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு |
||
10 |
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் |
|
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே! |
உரை | |
தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.-நல்விளக்கனார்
|
95. குறிஞ்சி |
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க, |
||
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று, |
||
அதவத் தீம் கனி அன்ன செம் முகத் |
||
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க, |
||
5 |
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, |
|
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக் |
||
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்; |
||
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி; |
||
கொடிச்சி கையகத்ததுவே, பிறர் |
||
10 |
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே. |
உரை |
தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது.-கோட்டம்பலவனார்
|
105. பாலை |
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து |
||
ஒளிர் சினை அதிர வீசி, விளிபட |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில், |
||
கடு நடை யானை கன்றொடு வருந்த, |
||
5 |
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் |
|
அருஞ் சுரக் கவலைய என்னாய்; நெடுஞ் சேண் |
||
பட்டனை, வாழிய-நெஞ்சே!-குட்டுவன் |
||
குட வரைச் சுனைய மா இதழ்க் குவளை |
||
வண்டு படு வான் போது கமழும் |
||
10 |
அம் சில் ஓதி அரும் படர் உறவே. |
உரை |
இடைச் சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.-முடத்திருமாறன்
|
188. குறிஞ்சி |
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் |
||
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை, |
||
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் |
||
மெல் விரல் மோசை போல, காந்தள் |
||
5 |
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! |
|
'நன்றி விளைவும் தீதொடு வரும்' என, |
||
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத் |
||
தேம் முதிர் சிலம்பில் தடைஇய |
||
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே. |
உரை | |
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
|
213. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி, |
||
'கன்று கால்யாத்த மன்றப் பலவின் |
||
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம் |
||
குழவிச் சேதா மாந்தி, அயலது |
||
5 |
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் |
|
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என, |
||
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென |
||
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த |
||
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக் |
||
10 |
கொய் புனம் காவலும் நுமதோ?- |
|
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே! |
உரை | |
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
294. குறிஞ்சி |
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு, |
||
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ; |
||
மாயம் அன்று-தோழி!-வேய் பயின்று, |
||
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும், |
||
5 |
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
|
கொன்ற யானைக் கோடு கண்டன்ன, |
||
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் |
||
சிலம்புடன் கமழும் சாரல் |
||
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே! |
உரை | |
மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
|
322. குறிஞ்சி |
ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும் |
||
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை; |
||
வாய்கொல் வாழி-தோழி! வேய் உயர்ந்து, |
||
எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை, |
||
5 |
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள் வரிக் |
||
கடுங் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன் |
||
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது, |
||
நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய் |
||
10 |
அணங்கு என உணரக் கூறி, வேலன் |
|
இன் இயம் கறங்கப் பாடி, |
||
பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே. |
உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகள், பாங்கிக்கு உரைத்ததூஉம் ஆம்.-மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றனார்
|
333. பாலை |
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென, |
||
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப் |
||
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின், |
||
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் |
||
5 |
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து, |
|
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி, |
||
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து, |
||
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்; |
||
நீங்குகமாதோ நின் அவலம்-ஓங்குமிசை, |
||
10 |
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி |
|
நயவரு குரல பல்லி, |
||
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே. |
உரை | |
பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்
|
334. குறிஞ்சி |
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
||
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை |
||
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப, |
||
5 |
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- |
|
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள், |
||
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி; |
||
மின்னு வசி விளக்கத்து வருமெனின், |
||
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே? |
உரை | |
தோழி இரவுக்குறி முகம் புக்கது.
|
366. பாலை |
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் |
||
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் |
||
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள் |
||
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ, |
||
5 |
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி |
|
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த |
||
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின் |
||
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி, |
||
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை |
||
10 |
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் |
|
வட புல வாடைக்குப் பிரிவோர் |
||
மடவர் வாழி, இவ் உலகத்தானே! |
உரை | |
உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.-மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
|
386. குறிஞ்சி |
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல், |
||
துறுகட் கண்ணிக் கானவர் உழுத |
||
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர், |
||
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது, |
||
5 |
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன். |
|
'அணங்குடை அருஞ் சூள் தருகுவென்' என நீ, |
||
'நும்மோர் அன்னோர் துன்னார் இவை' என, |
||
தெரிந்து அது வியந்தனென்-தோழி!-பணிந்து நம் |
||
கல் கெழு சிறுகுடிப் பொலிய, |
||
10 |
வதுவை என்று அவர் வந்த ஞான்றே. |
உரை |
பரத்தையின் மறுத்தந்த தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை முகம்புகுவல் என முற்பட்டாள், தலைமகள் மாட்டு நின்ற பொறாமை நீங்காமை அறிந்து, பிறிது ஒன்றன்மேல் வைத்து, 'பாவியேன் இன்று பேதைமை செய்தேன்; எம்பெருமாட்டி குறிப
|
393. குறிஞ்சி |
நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் |
||
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க, |
||
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து, |
||
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின், |
||
5 |
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி |
|
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி, |
||
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன் |
||
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய, |
||
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப, |
||
10 |
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன், |
|
நேர்வர்கொல் வாழி-தோழி!-நம் காதலர் |
||
புதுவர் ஆகிய வரவும், நின் |
||
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே? |
உரை | |
வரைவு மலிந்தது.-கோவூர் கிழார்
|
394. முல்லை |
மரந்தலை மணந்த நனந் தலைக் கானத்து, |
||
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை, |
||
பொன் செய் கொல்லனின், இனிய தெளிர்ப்ப, |
||
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடுந் தேர், |
||
5 |
வன் பரல் முரம்பின், நேமி அதிர, |
|
சென்றிசின் வாழியோ, பனிக் கடு நாளே; |
||
இடைச் சுரத்து எழிலி உறைத்தென, மார்பின் |
||
குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு |
||
நறுந் தண்ணியன்கொல்; நோகோ யானே? |
உரை | |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகனை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது;வன்சொல்லால் குறை நயப்பித்த தோழி தந்து அளித்ததூஉம் ஆம்.-ஒளவையார்
|