முகப்பு |
கிளி (பாசினம், கிள்ளை) |
13. குறிஞ்சி |
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய |
||
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!- |
||
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த |
||
பகழி அன்ன சேயரி மழைக் கண், |
||
5 |
நல்ல பெருந் தோளோயே! கொல்லன் |
|
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் |
||
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி |
||
மயில் அறிபு அறியாமன்னோ; |
||
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே. | உரை | |
இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்
|
25. குறிஞ்சி |
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன |
||
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின் |
||
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப் |
||
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம் |
||
5 |
வள மலை நாடன் நெருநல் நம்மொடு |
|
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ, |
||
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது |
||
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!- |
||
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா |
||
10 |
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி |
|
கண்டும், கழல் தொடி வலித்த என் |
||
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே! | உரை | |
தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்
|
102. குறிஞ்சி |
கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி! |
||
அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு, |
||
நின் குறை முடித்த பின்றை, என் குறை |
||
செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்; |
||
5 |
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, |
|
நின் கிளை மருங்கின், சேறிஆயின், |
||
அம் மலை கிழவோற்கு உரைமதி-இம் மலைக் |
||
கானக் குறவர் மட மகள் |
||
ஏனல் காவல் ஆயினள் எனவே. | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-செம்பியனார்
|
104. குறிஞ்சி |
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை |
||
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே, |
||
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக் |
||
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த |
||
5 |
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது |
|
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும் |
||
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் |
||
யானே அன்றியும் உளர்கொல்-பானாள், |
||
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர, |
||
10 |
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் |
|
போக்கு அற விலங்கிய சாரல், |
||
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே? | உரை | |
தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.-பேரி சாத்தனார்
|
134. குறிஞ்சி |
'இனிதின் இனிது தலைப்படும்' என்பது |
||
இதுகொல்?-வாழி, தோழி!-காதலர் |
||
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச் |
||
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி! |
||
5 |
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என, |
|
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர், |
||
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்! |
||
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு' என, |
||
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது |
||
10 |
ஒல்லேன் போல உரையாடுவலே! | உரை |
'இற்செறிப்பார்' என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.
|
143. பாலை |
ஐதே கம்ம யானே; ஒய்யென, |
||
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, |
||
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும், |
||
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும், |
||
5 |
கிள்ளையும், 'கிளை' எனக் கூஉம்; இளையோள் |
|
வழு இலள் அம்ம, தானே; குழீஇ, |
||
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் |
||
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் |
||
அறியேன் போல உயிரேன்; |
||
10 |
'நறிய நாறும் நின் கதுப்பு' என்றேனே. | உரை |
மனை மருட்சி.-கண்ணகாரன் கொற்றனார்
|
147. குறிஞ்சி |
யாங்கு ஆகுவமோ-'அணி நுதற் குறுமகள்! |
||
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல் |
||
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று |
||
எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி, |
||
5 |
அன்னை ஆனாள் கழற, முன் நின்று, |
|
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை |
||
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே; |
||
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து, |
||
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை |
||
10 |
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு, |
|
தலை இறைஞ்சினளே அன்னை; |
||
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே? | உரை | |
சிறைப்புறமாகத்தோழி சொல்லியது.-கொள்ளம்பக்கனார்
|
194. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி! கைம்மாறு |
||
யாது செய்வாங்கொல் நாமே-கய வாய்க் |
||
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும், |
||
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை, |
||
5 |
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் |
|
தனி நிலை இதணம் புலம்பப் போகி, |
||
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை, |
||
குன்ற வெற்பனொடு நாம் விளையாட, |
||
இரும்பு கவர்கொண்ட ஏனற் |
||
10 |
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே? | உரை |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
206. குறிஞ்சி |
'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி, |
||
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று, |
||
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ, |
||
செவ் வாய்ப் பாசினம் கவரும்' என்று, அவ் வாய்த் |
||
5 |
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க' என |
|
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும், |
||
'நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி' என |
||
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?-தோழி!- |
||
செல்வாள் என்றுகொல்? 'செறிப்பல்' என்றுகொல்? |
||
10 |
கல் கெழு நாடன் கேண்மை |
|
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே! | உரை | |
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.-ஐயூர் முடவனார்
|
209. குறிஞ்சி |
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத் |
||
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் |
||
சில வித்து அகல இட்டென, பல விளைந்து, |
||
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள், |
||
5 |
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல் |
|
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே |
||
படும்கால் பையுள் தீரும்; படாஅது |
||
தவிரும்காலைஆயின், என் |
||
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே! | உரை | |
குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்.-நொச்சி நியமங்கிழார்
|
259. குறிஞ்சி |
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-பொன் வீ |
||
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல், |
||
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி, |
||
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப் |
||
5 |
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
|
சாரல் ஆரம் வண்டு பட நீவி, |
||
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி |
||
அரிய போலக் காண்பேன்-விரி திரைக் |
||
கடல் பெயர்ந்தனைய ஆகி, |
||
10 |
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே? | உரை |
தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.-கொற்றங் கொற்றனார்
|
288. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு |
||
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப் |
||
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் |
||
குன்ற நாடன் பிரிவின் சென்று, |
||
5 |
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை |
|
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ, |
||
கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில் |
||
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற் |
||
சிறு கிளி கடிகம் சென்றும், 'இந் |
||
10 |
நெடு வேள் அணங்கிற்று' என்னும்கொல் அதுவே? | உரை |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது.-குளம்பனார்
|
301. குறிஞ்சி |
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி |
||
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை |
||
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், |
||
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் |
||
5 |
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், |
|
பாவை அன்ன வனப்பினள் இவள்' என, |
||
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, |
||
யாய் மறப்பு அறியா மடந்தை- |
||
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே. | உரை | |
சேட்படுத்து, 'பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.-பாண்டியன் மாறன் வழுதி
|
304. குறிஞ்சி |
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி, |
||
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ, |
||
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் |
||
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன் |
||
5 |
புணரின், புணருமார் எழிலே; பிரியின், |
|
மணி மிடை பொன்னின் மாமை சாய, என் |
||
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால், |
||
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும், |
||
இன்பமும் துன்பமும் உடைத்தே, |
||
10 |
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே. | உரை |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.- மாறோக்கத்து நப்பசலையார்
|
317. குறிஞ்சி |
நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்த |
||
பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப, |
||
தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை, |
||
பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும் |
||
5 |
உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை |
|
அன்னை அறிகுவள்ஆயின், பனி கலந்து |
||
என் ஆகுவகொல்தானே-எந்தை |
||
ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி, |
||
ஆயமொடு குற்ற குவளை |
||
10 |
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே? | உரை |
தோழி, தலைமகனை வரைவு கடாயது.-மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
|
328. குறிஞ்சி |
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி, |
||
சிற்சில வித்திப் பற்பல விளைந்து, |
||
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன் |
||
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால், |
||
5 |
அது இனி வாழி-தோழி!-ஒரு நாள், |
|
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு, |
||
பெரும் பெயல் தலைக, புனனே!-இனியே, |
||
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது |
||
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல், |
||
10 |
விலங்கு மலை அடுக்கத்தானும், |
|
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே. | உரை | |
தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது.-தொல் கபிலர்
|
368. குறிஞ்சி |
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி, |
||
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி, |
||
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு |
||
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ? |
||
5 |
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த |
|
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய |
||
பசலை பாய்தரு நுதலும், நோக்கி, |
||
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி, |
||
வெய்ய உயிர்த்தனள் யாயே- |
||
10 |
ஐய!-அஞ்சினம், அளியம் யாமே! | உரை |
தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது.- கபிலர்
|
376. குறிஞ்சி |
முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ |
||
இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை, |
||
வரையோன் வண்மை போல, பல உடன் |
||
கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! |
||
5 |
குல்லை, குளவி, கூதளம், குவளை, |
|
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன், |
||
சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் |
||
நல் தார் மார்பன், காண்குறின், சிறிய |
||
நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை |
||
10 |
அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி, |
|
வறும் புனம் காவல் விடாமை |
||
அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே? | உரை | |
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
389. குறிஞ்சி |
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும் |
||
தேம் படு நெடு வரை மணியின் மானும்; |
||
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்- |
||
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை |
||
5 |
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென, |
|
'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல் |
||
காவல் நீ' என்றோளே; சேவலொடு |
||
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் |
||
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல |
||
10 |
நன் பொன் இமைக்கும் நாடனொடு |
|
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே. | உரை | |
பகற்குறி வந்து ஒழுகாநின்ற காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
|