தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    இப்பாடம் முற்காலப் பாண்டியர் யார் என்பது பற்றியும், அவர்கள் எப்போது தங்கள் ஆட்சியைத் தமிழகத்தில் நிலைநாட்டினர் என்பது பற்றியும், அவர்களுள் களப்பிரர்களை வென்று ஆட்சியைப் பிடித்தது யார் என்பது பற்றியும் விளக்குகின்றது.

    சுமார் கி.பி.575 ஆம் ஆண்டிலிருந்து முற்காலப் பாண்டியர் ஆட்சியைத் தமிழகத்தில் நிலைநாட்டினர் என்பதை விளக்குகின்றது.

    கடுங்கோன், மாறவர்மன் அரிகேசரி, நெடுஞ்சடையன் பராந்தகன் போன்ற பாண்டிய மன்னர்கள் சிறந்து விளங்கினர் என்ற செய்தியைச் சான்றுகளுடன் விளக்குகின்றது.

    முற்காலப் பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டை விரிவுபடுத்த வேண்டிச் சேரருடனும், சோழருடனும், கங்கருடனும், ஈழத்தாருடனும் போர் புரிந்ததை விவரிக்கின்றது.

    பெரும்பாலும் எல்லா முற்காலப் பாண்டிய மன்னர்களும் சைவ சமயத்தைத் தழுவினார்கள் என்றும், ஒரு மன்னன் மட்டும் சமணத்தைச் சார்ந்திருந்தான் என்றும், பின்பு அம்மன்னனும் சைவத்திற்கு மாற்றப்பட்டான் என்றும் தெரிவிக்கின்றது.

    பாண்டிய மன்னர்களைப் பற்றிய வரலாற்று உண்மைகளை வேள்விக்குடிச் செப்பேடு அறிவுறுத்துவதைக் குறிப்பிடுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:30:17(இந்திய நேரம்)