Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I
2. பல்லவனது வேலூர்ப் பாளையக் கல்வெட்டுத் தரும் செய்திகள் யாவை? அவற்றிலிருந்து அறிவது யாது?
நந்திவர்மன் ஆட்சியில் வசந்தகாலம் சிறப்பளித்தது போல் முன் எப்போதும் சிறப்பளித்ததில்லை. நல்லியல்புகள் பொருந்திய பல பெருமக்கள் பிறந்திருந்தனர். பெண்மக்கள் சிறந்த கற்புடையவராக இருந்தனர். வள்ளல்கள் பலர் இருந்தனர். சான்றோர்கள் அடக்கமாக இருந்தனர். குடிகள் அரசனைச் சார்ந்து நின்றனர். சுமுகமான வாழ்வியல் சூழல், ஓயாத போர்கள், பஞ்சம் ஆகியவற்றுக்கு இடையிலும் நாட்டில் தெய்வ பக்தி இருந்தது என அறியலாம்.