தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாட்டுப்புறவியலும் மண்ணியலும்

  • 4.6 நாட்டுப்புறவியலும் மண்ணியலும் (Folklore And Geology)

    பூமி பல மண் அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவ்வடுக்குகளில் பல உயிரியல் எச்சங்கள் (Fossils) படிந்துள்ளன. இவ்வாறான மண் அடுக்குகளின் வரலாற்றைப் படிப்பதற்காக உருவான மண்ணியல் ஒரு முக்கியமான அறிவியல் துறையாகப் பரிணாமம் பெற்றுள்ளது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாட்டுப்புறவியலின் கோட்பாடுகளுக்கு மண்ணியலும் (Geology) உயிரியலும் (Biology) பல மாதிரிகளைத் தந்துள்ளன. மண்ணியலின் பரிணாம வாதக் கருத்து நாட்டுப்புறவியலாளர்களையும் பாதித்தது. இதன் மூலமாகக் கீழ்க்கண்ட கருத்துகள் பெறப்பட்டன. அவை,

    கடந்தகாலப் பண்பாட்டு மரபுகள் பல தலைமுறைகளாக ஒன்றிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டுத் தற்காலத்தே பண்பாட்டு எச்சங்களாக மிஞ்சியுள்ளன எனக் கருதத் தூண்டியது.

    ஒரு காலத்தில் உயிர்ப்புடன் விளங்கிய பண்பாட்டுக் கூறுகளே இன்றையே நாட்டுப்புற வழக்காறுகளாக உள்ளன எனக் கருதப்பட்டது.

    இந்த மண்ணியல் கருத்தாக்கத்தின் பின்னணியில் நாட்டுப்புறவியல் கருத்தாக்கமும் புரிந்துகொள்ளப்பட்டு, நாட்டுப்புற வழக்காறுகள் சாக மறுத்து இன்றளவும் உயிருடன் இருக்கும் பழைய காலத்துப் பண்பாட்டு எச்சங்கள் தாம் என்பது உறுதி செய்யப்பட்டது.

புதுப்பிக்கபட்ட நாள் : 06-10-2017 16:48:50(இந்திய நேரம்)