தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-5:6-தொகுப்புரை

  • 5.6 தொகுப்புரை

    தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புதிய யுகத்தைப் பாரதி தோற்றுவித்த செய்திகள் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவர், முந்தைய புலவர்கள் பாடிய வடிவத்தையும் பாடு பொருளையும் மனத்தில் கொண்டு பாடியிருப்பது புலனாகிறது. பழைய வடிவங்களில் காலத்திற்கு ஏற்பப் புதுப் பாடு பொருள்களைக் கொண்டும் பாடல்கள் பாடியிருப்பது தெரிய வருகிறது. அவை நாடு, கொடி, சுதந்திரம் ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், சாதி சமய ஒழிப்பு, உலகியல் வாழ்வுக்கான அறிவுரை முதலியனவாகும். அவர் புதிதாகப் படைத்த யாப்பு வடிவங்களான வசன கவிதை, சுய சரிதை ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறும் முயற்சி இந்தப் பாடத்தில் மேற்கொள்ளப்பட்டது. பாரதியாரின் பாடல்களின் தாக்கத்தினால் தோன்றிய புலவர்களில் சிலரையும் இனம் காட்டுகிறது.

     

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    பாரதியார் கையாண்ட பழைய வடிவங்களில் மூன்றின் பெயர் தருக.
    2.

    பாரதியார் ஆத்திசூடி என்னும் நீதி நூலை எழுதத் தூண்டுதலாக இருந்தவர் யார்?

    3.

    திருப்பள்ளி எழுச்சிப் பாடலில் பாரதியார் யாரைத் துயில் உணர்த்துகிறார்?

    4.

    பாரதியார், புது வடிவத்தில் தந்த பழைய பாடுபொருள் கொண்ட கவிதை எது? அதன் வாயிலாக நீவிர் அறிந்து கொள்வது என்ன?

    5.
    பாரதி புதிதாகப் படைத்த வடிவம் (யாப்பு) எது?
    6.

    பாரதி காட்டிய வழியில் நடைபயின்ற கவிஞர்கள் யார்?

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 19:14:50(இந்திய நேரம்)