தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-6:6-தொகுப்புரை

  • 6.6 தொகுப்புரை

    பாரதியார் முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்தவர்; ஆனால் தம் பலப்பல சாதனைகளால், எந்தக் காலத்து மனிதனாலும் மறக்க முடியாதவாறு வரலாற்றில் தடம் பதித்து விட்டார். இந்திய விடுதலை வரலாறு எழுதுவோர், தமிழ்க் கவிதை வரலாறு அமைப்போர், யாப்பிலக்கண வளர்ச்சி குறிப்போர், காப்பிய வார்ப்புப் பற்றி எழுதுவோர், பத்திரிகைப் புரட்சி பற்றி எண்ணுவோர், பெண்ணுலக மறுமலர்ச்சி வேண்டும் என்போர், சமூகச்சீர்திருத்தம் பற்றித் திட்டமிடுவோர் யாராயினும் பாரதியைத் தொடாமல் எழுத முடியாது. பாரதி என்றும் இறவாமல் வாழும் மனிதர்களில் ஒருவர்.

     

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    நம் குடியரசு எப்படியிருக்க வேண்டுமென விரும்புகிறார் பாரதியார்?
    2.

    தமிழை வளம்படுத்தற்குரிய வழிகள் எனப் பாரதி குறிப்பன யாவை?

    3.
    நாட்டுப்பற்று வேர்விடப் பாரதி கூறும் தீர்வு யாது?
    4.
    பெண்கள் பல தீமைகளிலிருந்து விடுபட எது அவசியம் என்கிறார் பாரதி?
    5.
    பாரதியார் வாழ்கிறார் என்பதற்குச் சான்றாகக் கூறத் தக்கனவற்றுள் இரண்டைக் கூறுக,

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:39:31(இந்திய நேரம்)