Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
4. குழந்தைப் பேற்றின் சிறப்பை அறிவுடை நம்பி எவ்வாறு உணர்த்துகின்றார்?
பலரோடு சேர்ந்து உண்டாலும் குழந்தைகளோடு சேர்ந்து உண்ணும் இன்பம் தனியானது. அக்குழந்தைகள் சோற்றைப் பிசைந்து, துழாவி, சிதறி, உடம்பெல்லாம் பூசிக் கொண்டாலும், பெற்றோர்க்கு அக்காட்சி இன்பமே உண்டாக்கும். அதனால் ‘மயக்குறு மக்கள்’ என்று பாடினார் அரசப் புலவர் அறிவுடை நம்பி.