தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 3.5 தொகுப்புரை

    இனிய மாணவர்களே! இதுவரை எட்டுப் புறநானூற்றுப் பாடல்களின் வரலாறு, பின்னணி, கருத்து ஆகியவற்றை அறிந்திருக்கின்றீர்கள். இப்பாடல்கள் சங்க கால மக்களின் பண்பாட்டைக் காட்டுவன. இவற்றின் திணை துறை விளக்கமும், பாடல் தோன்றிய சூழலும் கருத்திற் கொள்ள வேண்டியன.

    சிறப்புச் செய்திகள்

    பிசிராந்தையார் அறிவுடை நம்பியிடம் சென்று ‘வரி வாங்குவதில் ஒரு முறையைக் கடைப்பிடிப்பாயாக’ என அறிவுறுத்தியுள்ளார். பாண்டியன் இவருடைய அறிவுரையை ஏற்று நடந்திருக்கின்றான் என்பதை ‘யாண்டு பலவாக’ என்னும் பாட்டில் ‘வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்’ என்பதால் உணரலாம். கணியன் பூங்குன்றனார் பாடியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாட்டு நியதிக் (ஊழ்) கொள்கையைக் காட்டுவது. முன் செய்த வினைகளே தொடர்ந்து வந்து நல்லன தீயனவற்றை உண்டாக்கும் என்பது இப்பாட்டால் வற்புறுத்தப் பெறும்.

    கோப்பெருஞ்சோழன் தான் உயிர்விடக் கருதியது புகழ் பெறுவதன் பொருட்டே என்று கூறுகிறான். வானுலக வாழ்க்கை பெறாவிடினும், பிறப்புகள் மீண்டும் வாரா வண்ணம் வினை முடியாவிடினும், இறந்தபின் புகழ் நிலைபெற்றால் அதுவே விரும்பத் தக்கது என்பது சோழன் கருத்தாகும்.

    சங்க கால வாழ்வு வீரத்தைப் போற்றிய வாழ்வு, நோயிலும் பாயிலும் கிடந்து சாவதை விடப் போரில் புண்பட்டுப் புகழோடு இறப்பதை விரும்பிய வாழ்வு. இதனை 278ஆம் பாடல் விளக்குகின்றது. 312ஆம் பாட்டு வீட்டிற் பிறந்த ஒவ்வோர் ஆடவனுக்கும் உரிய போர்க் கடமையை உரைக்கின்றது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    காக்கை பாடினியார் பற்றிக் குறிப்பு வரைக.
    2.
    பெற்றபோது மகிழ்ந்ததைவிட எப்போது தாய் மிக மகிழ்ச்சி அடைவதாக நச்செள்ளையார் கூறுகின்றார்?
    3.
    வீரச் சமூகத்தில் ஒவ்வொருவர் கடமையும் பொன் முடியாரால் எங்ஙனம் விளக்கப் படுகின்றது?
    4.
    மூதின் முல்லை என்பதை விளக்குக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-11-2017 16:16:01(இந்திய நேரம்)