Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. வீரச்சமூகத்தில் ஒவ்வொருவர் கடமையும் பொன் முடியாரால் எங்ஙனம் விளக்கப் படுகின்றது?
“பெற்றுப் பாதுகாத்தல் எனக்குரிய கடமையாகும்; தன் குலத்துக்குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி அதற்குரிய தகுதிகள் ஆகியவற்றால் நிறைவுடையவனாகச் செய்தல் தந்தைக்குரிய கடமையாகும்; போர் செய்வதற்குரிய படைக்கலத்தைத் திருத்தமாகச் செய்து கொடுத்தல் கொல்லனுக்குரிய கடமையாகும்; நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமையாகும்; ஒளிவிடுகின்ற வாளைக் கையில் ஏந்திச் சென்று போர் புரிதற்கேற்ற களத்தில் பகைவரோடு மாறுபட்டுக் களிற்று யானையைக் கொன்று வெற்றியோடு மீளுதல் காளையாகிய வீர மகனுக்குரிய கடமையாகும்.” இவ்வாறு ஒரு தாய் கூறுவதாகப் பொன்முடியார் பாடுகிறார்.