Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1. காக்கை பாடினியார் பற்றிக் குறிப்பு வரைக.
புலவரின் இயற்பெயர் நச்செள்ளை என்பது. இவர் பெண்பாற் புலவர். இவர் ‘விருந்து வருவதை அறிவிக்கும் வகையில் காக்கை கரைகிறது’ என்று பாடிய பாடல் குறுந்தொகையில் உள்ளது. காக்கையைப் பற்றிப் பாடியமையால் இவர் காக்கை பாடினியார் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.