Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
5. நக்கீரர் அறிவுறுத்தும் வாழ்வியல் உண்மை யாது?
அரசர்க்கும் ஆனிரை மேய்ப்பார்க்கும் உண்பனவும் உடுப்பனவும் ஒரு தன்மையனவேயாகும். நாழி அளவே ஒருவர் உண்ணலாம்; இரண்டு ஆடைகளையே உடுக்கலாம். பசிபோக்க நாழி அளவு உணவு, மானம் காக்க இரண்டு ஆடைகள் இவைகளே ஒருவர்க்குரியன. இவற்றுக்கு மேலிருப்பனவற்றைப் பிறர்க்குக் கொடுப்பதே வாழ்வின் பயன். இவ்வாறு நக்கீரர் அறிவுறுத்துகின்றார்.