Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
7. கணியன் பூங்குன்றனார் பெரியோரை வியவாமைக்கும் சிறியோரை இகழாமைக்கும் காரணமாகக் கூறுவது யாது?
“எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் உறவினர்கள்; கேடும் நன்மையும் தாமே வரும். அவை பிறர் நமக்குத் தர வருவன அல்ல. அவற்றைப் போன்றே துன்பப்படுதலும் துன்பம் தீர்தலும் தாமே நிகழ்வனவாகும். இறப்பு என்பது இவ்வுலகிற்குப் புதியதன்று; அவ்விறப்பு உயிர் கருவில் தோன்றிய நாள் தொடங்கியே உள்ளது. வாழ்வதை இனியதென்று மகிழ்ந்ததும் இல்லை. அதனை வெறுத்துத் துன்பமானது என்றும் கருதவில்லை. பேராற்றின் நீரின் வழியே செல்லுகின்ற தெப்பம் போல அரிய உயிர் விதியின் வழியே செல்லும் என அறிவு மிக்கவர் கண்டறிந்து கூறினர். அவ்வறிவைத் தெளிவாக அறிந்து கொண்டோம். ஆகவே பெருமை மிக்க பெரியோரை நாம் வியந்து போற்றுதலும் இல்லை; சிறியோரைப் பழித்தல் அப்போற்றுதலை விடவும் இல்லை".