Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2. தொடித்தலை விழுத்தண்டினார் கழிந்து போன இளமை குறித்துக் கூறுவன யாவை?
‘இப்பொழுது நினைத்தால் வருத்தமாக உள்ளது. மணல் செறிந்த கரையில் செய்யப்பட்ட பொம்மைக்குப் (வண்டற்பாவை), பூவைப் பறித்துச் சூட்டி மகளிர் விளையாடுவர். அவரோடு கைகோத்துக் கொண்டு, தழுவியபோது தழுவியும், அசையும் போது அசைந்தும் மனத்தில் ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனையின்றிச் சிறுவர் விளையாடுவர். அச்சிறுவர்களில் ஒருவனாக உயர்ந்த கிளைகளைக் கொண்ட மருத மரத்தின் நீரில் வந்து படியும் கிளையிலே ஏறுவேன்; கரையிலே நிற்பவர் வியக்குமாறு, அலையெழுந்து நீர்த்துளிகள் தெறிக்க ஆழமிகுந்த மடுவில் (நீர்நிலையில்) துடுமென்று குதிப்பேன். ஆழத்தில் சென்று மணலைக் கையிலே அள்ளி வந்து காட்டுவேன். எதனையும் ஆழ்ந்து எண்ணிப் பாராத அந்த இளமை இப்போது இல்லையே என்பது இரங்கத் தக்கது. இப்போது, பூண்மாட்டிய தலையைக் கொண்ட பெரிய கோலையூன்றிக் கொண்டு தளர்ந்து போய் இருமலுக்கிடையில் சில சொற்களைப் பேசும் பெரிய முதுமை கொண்ட எனக்கு அந்த இளமை எங்கே போயிற்றோ என நினைக்க வருத்தமாக உள்ளது.”