தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பாடம் - 4

    D05114: சோழர், பாண்டியர், நாயக்கர் கோயிற்கலை


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        ஆலயக் கட்டடப் பரிணாம வளர்ச்சி பற்றிக் கூறுகிறது.

        சோழ மன்னர்கள் புரிந்த ஆலயப்பணிகளுள் திருவீழிமிழலை, திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், திருவையாறு ஐயாறப்பர் ஆலயம் முதலியவை பற்றிய கட்டடக் கட்டமைப்புக் கூறுகளைச் சுருக்கமாகக் கூறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

        உலகப்புகழ் பெற்ற இராமேசுவரம், பழநி, திருவில்லிபுத்தூர், திருவரங்கம், போன்ற தளங்களில் உள்ள கோயில்கள் பற்றிய செய்திகள் இப்பாடம் வாயிலாகத் தெரியலாகும்.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தமிழ்நாட்டில் ஆலய வளர்ச்சி பற்றிப் போதிய செய்திகள் தெரிந்து கொள்ள இப்பாடம் வாய்ப்பளிக்கும்.

    • பல்லவர்கள் தம் கலையார்வத்துடன் பல கற்கோயில்கள் கட்டித் தொடங்கி வைத்த பணியை மேன்மேலும் பெருக்கித் தமிழ்ப் பண்பாடு கோயிற்பண்பாடே என நினைக்க வைத்தார்கள் சோழ மன்னர்கள்; இவ்வுண்மையைத் திருவீழிமிழலைக் கோயில், திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், இராமேசுவரம் கோயில், பழநி தண்டாயுதபாணி மலைக்கோயில், திருவில்லிபுத்தூர்க் கோயில்கள், திருவரங்கம் அரங்கநாதர் கோயில் வாயிலாக வெளிப்படுத்தும் உத்தியால் புரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:44:00(இந்திய நேரம்)