தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    2)

    தமிழச்சியிலும் கொடிமுல்லையிலும் காணலாகும் கற்பனை வளத்துக்குச் சான்று தருக.

    கம்பன், தன் கற்பனையில் ஒரு ‘கோசல நாட்டைப்’ படைத்ததுபோல, தமிழச்சி கண்ட கற்பனை நாடு ஒன்றினைக் கவிஞரும் படைத்துக் காட்டியிருக்கிறார். அக்கற்பனைத் திருநாட்டில், ஆண்டியும் அரசனும் இல்லை; அவசரச் சட்டமும் இல்லை; வேண்டியது விருப்பம் போல் கிடைக்கும்; வழக்குகள் இல்லை; அந்நாட்டில் படிக்காத மக்களே இல்லை; மறுமணம் பெறுவதால் விதவைகள் இல்லை. அந்நாட்டில் உரிமைகளும் பொது; உடைமைகளும் பொதுவாகவே இருக்கும் எனக் கற்பனை நாட்டைப் படைத்திருக்கிறார் கவிஞர்.

    விண்மீன்கள் இல்லாத வானத்தைக் கரியபட்டுச் சேலை’ என்கிறார், ‘மதியவன் மறைந்துவிட்ட வானத்தை இருளரசி எப்படி ஆட்கொள்கிறாள்’ என்பதை, ‘கீழ்வானை இருள் விழுங்கக் கண்டான்’ என்று கொடிமுல்லையில் படைக்கிறார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:06:35(இந்திய நேரம்)