தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.5-தொகுப்புரை

  • 3.5 தொகுப்புரை


        
    சைவ சமயத்தின் தமிழ் வேதமாக விளங்குவன பன்னிரு
    திருமுறைகளாகும். சைவ சமயத்தின் உட்பொருளையும், சைவ
    சமயத்தின் வரலாற்றினையும் பன்னிரு திருமுறைகள் வகுத்துக்
    காட்டுகின்றன. ஆதலால் சைவ சமயத்தை அறிந்து கொள்ள
    அடிப்படையாக விளங்கும் பன்னிரு திருமுறைகள் பற்றிய
    குறிப்புகள் இப்பாடத்தில் திரட்டித் தரப் பெற்றுள்ளன.
    இத்தொகுப்பில் ஒவ்வொரு திருமுறையின் வரலாற்றுக்
    குறிப்புகள், ஆசிரியர் வரலாறு ஆகியவை முதலில்
    தரப்பெற்றுள்ளன. அடுத்துத் திருமுறையில் அமைந்துள்ள
    நூல்களின் பகுப்புகள் வகைப்படுத்தித் தரப் பெற்றுள்ளன.
    பின்னர் நூலின் பொதுவான சிறப்புகள் ஒருசில அறிந்து
    கொள்வதற்காகத் தரப்பெற்றுள்ளன. பாடத்தில் ஒருவர் பாடிய
    பல திருமுறைகள் என்ற அமைப்பில் முதல் 7 திருமுறைகளின்
    செய்திகள் தரப்பெற்றுள்ளன. அடுத்து ஒருவர் பாடிய
    இருநூல்கள் என்ற அமைப்பில் 8ஆம் திருமுறைச் செய்திகள்
    தரப்பெற்றுள்ளன. அடுத்துப் பலர் பாடிய ஒரு திருமுறை என்ற
    அமைப்பில் 9, 11ஆம் திருமுறைகளின்     செய்திகள்
    தரப்பெற்றுள்ளன. இறுதியில் ஒருவர் பாடிய ஒருநூல் என்ற
    அமைப்பில்     10, 12ஆம் திருமுறைச் செய்திகள்
    தரப்பெற்றுள்ளன. இச்செய்திகளைப் பயில்கின்ற பொழுது
    பன்னிரு திருமுறைகளை முழுமையாகப் பயிலவேண்டும் என்ற
    ஆர்வம் ஏற்படும்.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்ற நூல்களைப்
    பாடிய ஆசிரியர்கள் யாவர்?
    2.
    திருப்பல்லாண்டு என்பதன் விளக்கத்தைத் தருக.
    3.
    பதினோராம் திருமுறையில் இறைவன் பாடிய
    பாடலின் தலைப்பு யாது?
    4.
    காரைக்கால் அம்மையார் பாடிய நூல்கள் யாவை?
    5.
    நம்பியாண்டார் நம்பி பாடிய நூல்களில் மூன்றனைக்
    குறிப்பிடுக.
    6.
    திருமந்திரம் எத்தனை தந்திரங்களாகப் பிரிக்கப்
    பெற்றுள்ளது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:23:38(இந்திய நேரம்)