Primary tabs
-
6.5 தொகுப்புரை
இந்தியத் தத்துவ ஞானத்தில் சைவசித்தாந்தம் தனக்கென
ஒரு தனி முத்திரையைப் பெற்றதாகும். இத்தத்துவம் தோன்றிய
காலம் கணிக்கப் படாததால் மிகவும் தொன்மையானது என்பது
தத்துவ அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும். சைவசித்தாந்தம்
தான் கூறுகின்ற கொள்கைகளை மயக்கமற்ற நிலையில்
தெளிவுபடுத்துகிறது. எனவேதான் உலகத் தத்துவ அறிஞர்கள் பிற
தத்துவங்களோடு சித்தாந்தத்தை ஒப்பிட்டுப் பேசுவர். இத்தகைய
சித்தாந்தக் கொள்கைகள் இப்பாடத்தில் சுருக்கமாகத்
தரப்பட்டுள்ளன. இச்சுருக்கத்தின் அடிப்படையில் விரிவாகச் சாத்திர
நூல்களையும், சித்தாந்தக் கட்டுரைகளையும் பயின்று பயன் பெறுதல்
வேண்டும். இப்பாடத்தில் சைவசித்தாந்த தத்துவங்களின்
பெருமைகளும், அவை அடிப்படையாக உணர்த்துகின்ற
முப்பொருள்களின் நிலைகளும் பொதுவான அடிப்படையில்
விளக்கப்பெற்றுள்ளன. இதன்மூலம் சித்தாந்த தத்துவத்தின்
அடிப்படையை உணர்ந்து கொள்ளலாம்.