Primary tabs
-
5.0 பாட முன்னுரை
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது புறநானூற்று வரி.
இவ்வுலகில் வாழ்பவர்கள் இன்பமாக வாழ்வதும் துன்பமாக
வாழ்வதும் அவர்களின் செயல்களைக் காரணமாகக் கொண்டே
அமைகின்றன. மாறாக, ஒருவருக்கு நன்மையோ தீமையோ
பிறரால் ஏற்படுவது இல்லை என்பது இப்பாடல் வரியின் பொருள்
ஆகும்.புத்தர் பிரான்மனித வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்பங்கள் பற்றிப்
பல்வேறு காலங்களில், பல்வேறு சூழலில் பலரும் சிந்தனை
செய்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் புத்தர் பிரான்.
உலகில் உள்ள உயிர்கள் மகிழ்வுடனும் இன்பமுடனும் வாழ்வதற்கு
உரிய வழிமுறைகள் பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்பே
சிந்தித்தவர் இவர்.ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆகையால்
ஆசையை அறவே (முழுவதும்) ஒழிக்க வேண்டும். இதுதான்
வாழ்வதற்கான வழி என்று கண்டு உணர்ந்து கூறியவர் புத்த
பிரான்.அவரது வாழ்க்கை வரலாற்றையும், பழந்தமிழ் நாட்டில்
அவரை வழிபட்ட முறைகளையும், அவர் வற்புறுத்திய
நெறிகளையும் மாணவர்களுக்குச் சுருக்கமாக எடுத்துக் கூறும்
வகையில் இப்பாடம் அமைகிறது.