தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.5-தொகுப்புரை

  • 5.5 தொகுப்புரை


        அன்பு நிறை மாணவர்களே! இப்பாடச் செய்திகளில்
    முக்கியமானவற்றை ஒரு சில வரிகளில் சிந்தனையில்
    கொள்ளுங்கள்.

    புத்தரின் பெற்றோர்
    :
    சுத்தோதனர் - மாயாதேவி
    புத்தர் பிறந்த ஆண்டு
    :
    கி.மு. 563
    புத்தர் பரிநிர்வாணம்
    பெற்ற ஆண்டு
    :
    கி.மு. 483
    புத்தர் காணக் கூடாதவை
    :
    முதியவர், நோயாளி, பிணம், துறவி
    புத்தர் துறவு நெறிச்
    செல்வார் என்று கூறியவர்
    :
    கௌந்தஞ்ஞர்
    புத்தரின் மனைவி
    :
    யசோதை
    புத்தரின் மகன்
    :
    இராகுலன்
    • புத்தர் தம் 29ஆம் வயதில் துறவு மேற்கொண்டார்.
    • புத்தர் தம் 35ஆம் வயதில் போதி ஞானம் பெற்றார்.
    • பௌத்தர்கள் தொடக்கக் காலத்தில் சைத்தியங்கள்,
      பீடிகைகள் ஆகியவற்றை வழிபட்டனர்.
    • பௌத்தர்கள் புத்தரின் திருவுருவத்தையும் வழிபட்டனர்.
    • மணிமேகலை, சம்பாபதி, கந்திற்பாவை, சதுர் மகாராஜிகர்,
      சக்கன், அவலோகிதர் என்பன பௌத்தர்கள் வழிபட்ட சிறு
      தெய்வங்களுள் சில.
    • பௌத்த நெறிகள் அடங்கிய நூல் திரிபிடகம்.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    (1)
    பௌத்த நெறிகள் யாருடைய காலத்தில் நூல் வடிவம்
    பெற்றன?
    (2)
    பிடகம் - பொருள் தருக.
    (3)
    திரிபிடகங்கள் யாவை?
    (4)
    விநய பிடகம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
    (5)
    புத்தரின் சீடர்கள் இருவரைக் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:40:34(இந்திய நேரம்)