Primary tabs
-
5.3 பௌத்த நெறிமுறைகள்
புத்தர் தமது கருத்துகளைப் பாலி மொழியிலேயே
கூறினார். புத்தர் தமது கருத்துகளை நூல் வடிவில் எழுதவில்லை.
புத்தரின் போதனைகளை அவரது சீடர்கள் கேட்டு மனப்பாடம்
செய்து அப்போதனைகளைத் திரும்பப் போதித்து வந்தனர்.இலங்கை அரசன் வட்டகாமினி அபயன். அவன்
இலங்கையை கி.மு.29 முதல் 17 வரையில் அரசாண்டான்.
இவ்வரசன் காலத்தில்தான் புத்தர் போதித்த நெறிமுறைகள் நூல்
வடிவம் பெற்றன. இதற்குத் திரிபிடகம் என்று பெயர்.திரிபிடகம் என்பதைப் பாலி மொழியில் திபிடகம் என்று
கூறுவர். பிடகத்தைப் பிடக்கு என்று தேவாரம் கூறுகிறது.
இந்துக்களுக்கு வேதங்கள் போல, பௌத்தர்களுக்குத் திரிபிடகம்
விளங்குகிறது.பிடகம் என்றால் பெட்டி அல்லது கூடை என்று
பொருள். பௌத்த நெறிகளைக் கூறும் நூலைப் பௌத்தர்கள்
பெட்டிகளில் அல்லது கூடைகளில் வைத்துப் பாதுகாத்தனர்.
எனவே, பிடகம் என்ற பெயர் வழங்கலாயிற்று. பிடகங்கள்
மூன்று. அதனால் திரிபிடகம் என்ற சொல் வழக்கு ஏற்பட்டது.
அவைபுத்தர் பரிநிர்வாணம் (மோட்சம்) அடைந்த பிறகு
பௌத்தத் துறவிகள் (தேரர்கள்) 500 பேர் ஒன்று கூடினர்.
இக்கூட்டம் மகத நாட்டின் தலைநகரான இராசகிருக நகரத்துக்கு
அருகில் சத்தபணி என்னும் மலைக் குகையில் நடைபெற்றது.
இதைப் பௌத்தர்களின் முதல் மாநாடு என்று கூறலாம்.இம்மாநாட்டிற்குப் புத்தரின் முக்கிய சீடர் மகாகாசிபர்
தலைமை தாங்கினார். புத்தர் அருளிய போதனைகளை உபாலி
என்னும் துறவி (தேரர்) எடுத்து ஓதினார். இதற்கு விநய பிடகம்
என்று பெயர். இது விநய பிடகம், பாதிமோக்கம் என்னும்
இரண்டு பிரிவுகளை உடையது.விநய பிடகத்தில் பௌத்தத் துறவிகளுக்கான விதிகளும்
நியமங்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.புத்தர் அருளிய தம்ம (தர்ம) போதனைகளை அவரின்
மற்றொரு சீடரான ஆனந்தர் மேற்கூறிய மாநாட்டில் எடுத்து
ஓதினார். இதற்குத் தம்ம பிடகம் என்று பெயர். இதனை
அபிதம்ம பிடகம் என்றும் கூறுவர். இது ஏழு பிரிவுகளை
உடையது. அவை:- தம்ம சங்கணீ
- விபங்கம்
- கதாவத்து
- பஞ்ஞத்தி (அல்லது) பண்ணத்தி
- தாது கதை
- யமகம்
- பட்டானம்
அபிதம்ம பிடகத்தில் தருமமும், அதைச் சார்ந்த கிரியா
கருமங்களும் (சடங்குகளும்) விளக்கப்பட்டுள்ளன. வேதங்களில்
பிராம்மணங்கள் எப்படியோ, அப்படித்தான் பிடகங்களில்
அபிதம்ம பிடகமும்.முதல் பௌத்த சங்க மாநாட்டில், புத்தரின் போதனைகள்
விநய பிடகம், அபிதம்ம பிடகம் என்று இரு பிரிவுகளாகத்
தொகுக்கப்பட்டன. பிற்காலத்தில் அபிதம்ம பிடகத்திலிருந்து
சில பகுதிகளைத் தனியாகப் பிரித்து சூத்திர பிடகம் என்று
பெயரிட்டனர்.மூன்று பிடகங்களிலும் சூத்திர பிடகம் மிகவும் சிறப்பு
வாய்ந்தது ஆகும். இதில் புத்த மதத்தின் எல்லா முக்கியமான
தத்துவங்களும் விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளை
உடையது. அவை:விநய பிடகத்தை ஓதிய பிக்குகள் விநயதரர் என்றும்
சூத்திர பிடகத்தை ஓதிய பிக்குகள் சூத்திராந்திகர் என்றும்
அபிதம்ம பிடகத்தை ஓதிய பிக்குகள் அபிதம்மிகர் என்றும்
அழைக்கப்பட்டனர்.