3. கட்டில்
ஏற்றியது
|
இதன்கண் : சயந்தியின்கண்
உதயணனுக்கும் வாசவிதத்தைக்கும நடத்தற்குரிய திருமண விழாவிற்குக் கணிமாந்தர் நன்னாள்
அறிந்து கூறுதலும், திருமணப் பந்தர் இயற்றுதலும், தெய்வங்கட்கு மடைகொடுத்து
வாழ்த்துதலும், தெய்வம் தொழுதலும், செம்முது பெண்டிரும் கன்னிமகளிரும் கடவுளரை
வழிபடுதலும், காஞ்சனை வாசவதத்தையை உதயணன் பக்கலில் சேர்த்தலும், உதயணன் திருமணச்
சடங்குஇயற்றுதலும், பள்ளிக்கட்டிலின் மாண்பும், வாசவதத்தையையும் உதயணனையும்
சயந்திமாந்தர் பள்ளிக்கட்டிலேற்றி மகிழ்தலும், பிறவும் கூறப்படும், |
|
5 |
கடிகமழ் செல்வம் கலந்த காலை இடிஉறழ் முரசின் ஏயர்பெரு
மகன்கும் பிடிமகிழ் யானைப் பிரச்சோ
தனன்மகள் வடிமலர்த்
தடக்கை வாசவ தத்தைக்கும் ஓருயிர்க் கிழமைஓரை அளக்கும் பேரிய லாளர் பிழைப்புஇலர்
நோக்கி வழுஇல்
செந்தீப் பழுதுஇல வேட்கும் பொழுதுமற்று இதுஎனப் புரையோர்க்கு உரைப்ப
|
உரை |
|
10
15 |
அறுதொழில் முத்தீ அருந்துறை போகிய மறைநவில் நாவின் மரபியல்
அந்தணன் பல்பூம்
பந்தருள் செல்வம்
சிறக்கும் இருநிலத்து இலக்கணம் இயற்பட நாடி வெண்மணல் நிரப்பம் கொளீஇக் கண்ணுறப். புண்ணியப் பலாசின் கண்ணிறை சமிதை முக்குழிக் கூட்டத்துட்பட
ஓக்கி ஆற்றாச் செந்தீ அமைத்தனன் மேற்கொள
|
உரை |
|
20
25 |
ஐஒன்ப தின்வகைத் தெய்வம்
நிலைஇய கைபுனை வனப்பில் கான்முதல்
தோறும் ஆரணங்கு ஆகிய அணிமுளை அகல்வாய்ப் பூரண பொன்குடம் பொலிய
இரீஇ வெண்மணல் ஞெமிரிய தண்நிழல்
பந்தருள் ஐஇய வாசஆன் நெய்யொடு
கலந்த ஐவகை உணவொடு குய்வளம் கொளீஇ நறிய ஆகிய அறுசுவை
அடிசில் பெருஞ்சோற்று அமலை பரந்துபலர் மிசையும் மிச்சில் எய்தா உட்குவர் ஒருசிறை
|
உரை |
|
30
35 |
.,,,,,விசை அம்மிக் குணதிசைக் கோணத்து ஈடமை பீடிகை பாடுபெற
இருந்த பொன்னயி ராணி முன்வயின் பேணிப் பன்னிய பனுவல் பார்ப்பன
முதுமகன் அந்தண் ஆவிரை அலரும் அறுகையும் நந்தி வட்டமும் இடைஇடை
வலந்த கோல மாலை நாற்றி வானத்து அருந்ததி அரிவையோடு ஆணிகன்
பரவும் பொருந்துமொழிப்
புறநிலை புணர்ந்துபலர் வாழ்த்தி நூன்முறை படைத்த நான்முகக்
கடவுள் தாள்முதல் தானத்துத் தகைபெற இரீஇப்
|
உரை |
|
40
45 |
பால்உலை
வெந்த வால்அவிழ்க் கலவையும் தேன்உலை வெந்த தூநிறத்
துழவையும் புளிஉலை
வெந்த பொன்நிறப் புழுக்கலும் கரும்புலை வெந்த கன்னல்
துழவையும் நெய்யுலை வெந்த மைந்நிறப் புழுக்கொடு பொன்னகல் மணியகல் செப்பகல்
வெள்ளி ஒண்ணிறப் போனக மண்ணக மலிர அரிவையர் அடுமடை அமிழ்துகொண் டோச்சிப்
|
உரை |
|
50
55 |
பஞ்ச
வாசமொடு பாகுவலத்து இரீஇ அஞ்செஞ் சாந்தமொடு மஞ்சள்
நீவி இருப்பகல்
நிறைந்த நெறுப்புநிறை சுழற்றித் தேவர் தூம மேவர எடுப்பி மலையிள்நீர் ஆயினும் மண்ணின்நீர்
ஆயினும் அலைதிரைப் பௌவத்து அகத்தினீர் ஆயினும் விசும்பினீர் ஆயினும் விரும்புபு
வந்துநும் பசும்பொன் உலகம் பற்றுவிட்டு ஒழிந்து குடைநிழல் தானைக் கொற்றவன்
மடமகள் மடைஅமைந்து உண்டு
மங்கலம் தம்மென ஒப்பக் கூறிச் செப்புவனர் அளிப்பக்
|
உரை |
|
60
65 |
கன்னிமகளிர் துன்னுவனர் குழ நான்முகக் கடவுளொடு தாள்முதல்
தானம் அன்னத் தொழுதியின் மென்மெல வலங்கொண்டு அம்மென் சாயல் செம்முது
பெண்டிர் உழுந்தும் சாலியும் உப்பும் மலரும் பசுங்கிளிச் சிறைஎனப் பக்கம்
நிறைத்த பாகும் சாந்தமும் போகமொடு புணர்ந்த மங்கல மரபின அங்கையுள்
அடக்கிக் கொழுமுகைச்
செவ்விரல் போதுஎனக் கூப்பி எழுமுறை இறைஞ்சுகென்று ஏத்துவனர்
காட்ட ஐதுஏந்து அல்குலர் செய்கையில் திரியா மடைத்தொழில் கழிந்தபின் நடைப்படம் நாட்டி
|
உரை |
|
70
75 |
அரம்போழ் அவ்வளை அணிந்த முன்கைச் சுருங்காச் சுடர்ஒளிச் செம்பொன்
பட்டம் சூளா மணியொடு துளங்குகடை துயல்வரும் புல்லகம் பொருந்திய மெல்என்
ஓதிப் பொன்அணி மாலை பொலிந்த பூமுடிஇ வண்ணப் பூமுடி வாசவ
தத்தையைச் செண்ணக் காஞ்சணை
செவ்விதின் தழீஇ இலக்கம் திரியாது இயற்பட
இரீஇ நலத்தகை மன்னவன் நட்பொடு புணர்த்த
|
உரை |
|
80
85
90 |
புண்ணியப் புறநடைப் பண்அமை
இருக்கையன் உறுவரை உதயத்து உச்சிமுகம் நோக்கி அமைதிக்குஒப்ப அளந்துகூட்டு அமைத்த சமிதைக் கிரிகை சால்புளி
கழிப்பி மந்திர விழுநெறித் தந்திரம் பிழையாது துடுப்பில் தோய்த்த சேதா
நறுநெய் அடுத்த செந்தீ அங்குஅழல் ஆர்த்திப் பைம்பொன் கிண்கிணிபாட்டுமிசை ஆர்க்கும் செந்தளிர்ச் சீறடி செல்வனம் பற்றிப் போகமும் கற்பும் புணர்ந்துடன்
நிற்கென ஆகுபொருள் கூறி அம்மிமுதல் உறீஇ நன்நெய் தீட்டிய செம்மலர்
அங்கைப் பொம்மல்
வெண்பொரி பொலியப் பெய்தபின்
|
உரை |
|
95 |
நன்நிலை உலகினுள் நாவல் போலவும் பொன்அணி நெடுமலை போலவும்
பொழில்வயின் மன்னுக இவரெனத் தன்நெறி
பிழையான் விதியில் கூறிய விளங்குஇழை
வேட்கும் அதிரா
நெறியின் அத்தொழில் கழிந்தபின்
|
உரை |
|
100
105 |
மதியின் அன்ன வாண்முகம் பொலிய ஓடுகொடி மூக்கின் ஊடுபோழ்ந்து
ஒன்றாய்க் கூடுதல் வலித்த கொள்கைய போலப் பொருது போந்துஉலாம் போதுஅரித்
தடங்கண் அமிழ்துசேர்ந் தனஅக
விதழ்நாண் இறக்கமொடு பிறந்தஇல் பெருங்கிளை நிறைந்துஒருங்கு
ஈண்டப் பால குமரர் தோள்புகன்று எடுப்ப நாடும் நகரமும் கூடுதற்கு
அருளி யாயும் எந்தையுந் தீமுன் நின்று வாயில் கூடுதல் வராதுஇவண் வந்துஎன வலிபுணர் வதுவைக்குச் சுளியுநள்
போல நடத்தல் தேற்றா மடத்தகை மாதரை
|
உரை |
|
110
115 |
வளைபொலி முன்கை வருந்தப் பற்றித் தளைஅவிழ் தாரோன் வலமுறை
வந்து மறுவுஇல் காதல் மக்களைப்
பெறுகஎன முறைமையில் பிழையாது முகிழ்வி்ரல் பற்றித் தகாஅக் காலம்தலைவரும்
எனினும் பகாஅக் காதலொடு பத்திமை,,
,,,,,,,,, செஞ்சுடர்
போன்ற அங்குலி நுழையா வெஞ்சுடர்
வீரன் நெஞ்சு முதல்
நீவித் தென்மருங்கு
மடுத்த தீர்த்தப் புல்மிசை மென்மருங்கு எழிலியை மெல்லென
நடாஅய் வதுவைத் தானம் பொதுவந்து ஒன்றி அந்த ணாளர் ஆசிடை கூற
|
உரை |
|
120
125 |
வெந்திறல் வேந்தன்
பைந்தொடி
யோடும் உத்தர
கோணத்து அத்தக
அமைத்த ஏற்றுஉரி அதல்மிசை ஆற்றுளி இருந்து படுசுடர் செக்கர்ப் பசலை
தீர விடுசுடர் மதியமொடு வெண்மீன் இவர்ந்த வடபால் மருங்கில் சுடர்மீக்
கூரிய கற்புடை விழுமீன் காணக் காட்டிப் பொற்றொடி நுதல்மிசைப் புனைவிரல்
கூப்பி மன்னிய உலகினுள் நின்இயல்பு
ஆக என்வயின்
அருளென மும்முறை இறைஞ்சுவித்து
|
உரை |
|
130 |
எதிர்த்த விரதமொடு
இயல்பில்
பிழையாது சதுர்த்தி
இருந்து கதிர்த்த காப்பொடு மெய்ம்முதல் திரியாது வேண்டும்
கிரிகையில் கைம்முதல்
கேண்மை கழுமிக் கழிந்தபின்
|
உரை |
|
135
140
145 |
மருப்பினும் பொன்னினும் மணியினும் புனைந்த திருத்தகு திண்கால் திருநிலை
பெற்ற வெண்பூம் பட்டின் திண்பிணி
அமைந்த பள்ளிக் கட்டில் வெள்ளிதின் விரிந்த கோடுஉயர் பல்படை சேடுஉறச்
சேர்த்தி வயிரமும் வெள்ளியும் பவழமும் பொன்னும் மணியும் முத்தும் அணிபெறப்
பரப்பி அடிநிலை அமைத்து முடிநிலை காறும் தாமம் நாற்றிக் காமம்
குயின்ற கோலச் செய்கை வாலணிப் பொலிந்த எட்டி காவிதிப் பட்டம்
தாங்கிய மயில்இயல் மாதர் இயல்பில் படுத்த கட்டில் மீமிசைக் கட்டுஅலர்
கமழும்
|
உரை |
|
150
155 |
ஒண்தார் மார்பின் உதயண குமரற்குத் தண்டாக் காதலொடு தக்கவை
அறிந்து விண்ணவர்
கிழவன் வீற்றிடம் கடுப்ப மண்ணக மன்னர் மரபுஅறிந்து
இயற்ற அவ்வளைப்
பணைத்தோள் அதிநா கரிகியைக் கைவயின் பிழையாது காஞ்சனை தழீஇ உண்மை
உணரா நுண்மைப் போர்வைஇவள் பெண்மை காணினோ பிழைப்பிலன்
யான்எனத் தன்னொளி சமழ்த்திவள் பெண்ணொளி புகற்ற மண்ணார் மணிப்பூண் மாதரை இரீஇயபின்
|
உரை |
|
160
165 |
கண்ணார் குருசிலைக் கவின்பெற ஏற்றித் தகைமலர்த் தாரோன் தடக்கை
பற்றிஅவள் முகைமலர்க் கோதை முடிமுதல்
தீட்டிச் செம்பொன்
தாலம் மலிரப் பெய்த மங்கல அயினி மரபுளி
உறீஇ ஒல்என் சும்மையொடு பல்வளம் தரூஉம் உருமண் ணுவாவின் பெருநகர்
மாந்தர் ஆசில் செங்கோல் அவந்தியன் மடமகள் வாசவ தத்தையொடு வத்தவர்
இறைவனை முட்டில் செல்வமொடு முறையில் பிழையாது கட்டில்ஏற் றினரால் கருதியது முடித்துஎன். |
உரை |
|