தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    2.

    மணிமேகலை மலர்வனம் புகுவதற்கான சூழல் என்ன?

    கோவலன் இறப்பால் துறவு பூண்ட மாதவி தன் மகள் மணிமேகலையையும் துறவு நெறிப்படுத்துகிறாள். கோவலன்-கண்ணகி அடைந்த துன்ப நிகழ்ச்சியை எடுத்துக் கூறி, அதனால் உலகியல் வாழ்வை வெறுத்ததாகக் கூறுகிறாள். தன் தந்தைக்கு ஏற்பட்ட துன்ப நிகழ்வைக் கேட்டுக் கொண்டிருந்த மணிமேகலை துன்புற்று அழுகிறாள். அவள் கண்ணீர் அவளை அறியாமல் புத்தபிரானுக்காகத் தொடுத்துக் கொண்டிருந்த மலர் மாலையில் பட்டு விடுகிறது. எனவே மாலை புத்தனுக்குச் சூடத் தகுதியற்றதாகிறது. இதனால் புதிய மாலை தொடுக்க மலர் பறித்து வருவதற்காக மலர் வனம் செல்கிறாள் மணிமேகலை. இதுவே மலர்வனம் செல்வதற்குக் காரணம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:18:27(இந்திய நேரம்)