தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    4.

    மணிமேகலை உணர்த்தும் சமயச் சிந்தனை யாது?

    மணிமேகலைக் காப்பியம் பௌத்த சமயக் கொள்கையை விளக்க எழுந்த காப்பியம் என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக அனைத்துச் சமயங்களும் இளமை, யாக்கை, செல்வ நிலையாமை பற்றிப் பேசும். இவ்வகையில் மணிமேகலை இதனை ஆழமாக எடுத்துரைக்கிறது. “இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா; வான்பெரும் செல்வமும் நில்லா” என இதனை எடுத்தோதுகிறது. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதில் சமண, பௌத்த மதங்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவை. மணிமேகலையில் வரும் அனைத்துப் பாத்திரங்களின் எல்லாச் செயல்களுக்கும் ‘வினைப்பயனே’ காரணம் என்பதை உணர்த்துகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)