தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள்

  • பாடம் - 4

    A01134 இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள்

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம், இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படும் சீறாப்புராணத்தையும், சின்ன சீறாவையும் பற்றிக் கூறுகிறது. சீறாப்புராணத்தில் இடம்பெறும் சமயக் கருத்துகளை எடுத்துரைக்கிறது. உமறுப் புலவர் பெண்ணையும், ஞாயிற்றையும், குறிஞ்சி நிலத்தையும் எவ்வாறு வருணிக்கிறார் என்பதையும் கூறுகிறது. மேலும், ஆசிரியர் பின்பற்றும் தமிழ் மரபையும் வெளிப்படுத்துகிறது. சின்ன சீறாவின் உள்ளடக்கம், கற்பனை நயம் ஆகியவற்றையும் விளக்குகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • இசுலாமியக் காப்பியங்களுள், சீறாப்புராணமும் சின்ன சீறாவும் சிறப்புடையவை என்பதனை அறிந்து கொள்ளலாம்.

    • சீறாப்புராணத்தில் இடம்பெற்றுள்ள சமயக் கருத்துகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    • உமறுப்புலவர் எத்தகைய சமயப் பொறையுடையவர் என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

    • உமறுப்புலவரின் தமிழ்ப் பற்றையும், தமிழ் மரபைப் பின்பற்றும் தன்மையையும் தெரிந்து கொள்ளலாம்.

    • சின்ன சீறாவில் இடம்பெற்றுள்ள கற்பனையின் சிறப்பினைப் படித்து இன்புறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 11:28:06(இந்திய நேரம்)