Primary tabs
- 
பாடம் - 2 A01132 தேம்பாவணி இந்தப் பாடம் என்ன சொல்கிறது? இந்தப் பாடம், வீரமாமுனிவரைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. தேம்பாவணி காப்பியத்தின் அமைப்பை விளக்குகிறது. காப்பியத்தில் இடம்பெறும் கதை மாந்தர்கள் இயல்புகளைச் சுட்டுகிறது. எந்த அளவுக்கு விவிலியத்தின் தாக்கம் இக்காப்பியத்தில் உள்ளது என்பதையும் எடுத்துரைக்கிறது. இறுதியாகக் காப்பியத்தின் இலக்கியத் திறனையும், தனிச்சிறப்புகளையும் விளக்குகிறது. 
 இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்? - 
 தேம்பாவணி என்னும் இக்காப்பியத்தின் ஆசிரியர் பற்றியும் அவரது தனிச்சிறப்புகள் பற்றியும் அடையாளம் காணலாம். 
- 
                      இக்காப்பியம் கூறும் கிறித்தவ சமயக் கோட்பாடுகளையும் விவிலியக் கதைகளையும் தொகுத்துக் கொள்ளலாம். 
- 
 இக்காப்பியத்தின் தனிச்சிறப்புகளை அறிந்து கொள்ளலாம் 
- 
 தமிழகத்திற்கு வெளியிலிருந்து வந்த சமயங்களின் கோட்பாடுகள், தமிழில் இலக்கிய வடிவம் பெறும்போது ஏற்கும் மாற்றங்களையும் அதனால் தமிழிலக்கியம் பெறும் பயன்களையும் பட்டியலிடலாம். 
 
- 
 
 
						 
						 

