Primary tabs
-
பாடம் - 5
A01135 முற்கால இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இசுலாமியத் தமிழிலக்கியத்தின் முதல் காப்பியமாகிய கனகாபிசேக மாலையைப் பற்றிக் கூறுகிறது. மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரின் இராஜநாயகம், குத்புநாயகம், தீன்விளக்கம் ஆகிய மூன்று காப்பியங்களைப் பற்றியும் விளக்குகிறது.
இராஜ நாயகம் காப்பியத் தலைவர் நபி சுலைமான் பற்றிக் கூறுகிறது.
குத்பு நாயகம் காப்பியத் தலைவர் முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் வாழ்வியல் பற்றி விளக்குகிறது.
தீன் விளக்கம் காப்பியத் தலைவர் கீழக்கரையின் அண்மையிலுள்ள ஏர்வாடியில் சமாதி கொண்டிருக்கும் செய்யிது இப்ராகீம் என்னும் இறையடியாரின் வாழ்வியலைப் பற்றிப் பேசுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களில் நான்கினைப் பற்றிய அறிமுகம் பெறலாம்.
-
காப்பியங்களின் இலக்கிய நயமும் சுவையும் அறிய முடியும்.
-
இயற்கை வருணனை, கற்பனை வளம், போர் வருணனை ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
-
மேலும் இறைத்தூதர்கள் பற்றியும் இக்காப்பியங்களைச் செய்த இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் தனித் தன்மைகளைப் பற்றியும் அறியலாம்.
-