Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
5)
பீடணன் குறித்துச் சிறு குறிப்பு தருக.
பீடணன் இராவணனின் தம்பி. சுக்கிரீவன் அண்ணன் வாலியின் கிட்கிந்தையை இராமனின் உதவியால் பெற்றதைப் போல் தானும் இலங்கை ஆட்சியைப் பெற வேண்டும் என்று திட்டம் தீட்டினான். தன் கருத்தைத் தன் நண்பன் நீலனுக்கும் அனுமனுக்கும் தெரிவித்து அவர்களின் உதவியையும் நாடினான். தன் பாட்டி தாடகையும் தன் தங்கை காமவல்லியும் இறக்கக் காரணமான இராமனிடம் அடைக்கலமானான். மக்களின் ஆதரவு இன்றி இலங்கை மன்னனாகப் பொறுப்பேற்று ஆண்டான்.