தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  •  

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
     

    1)

    அகலிகை வெண்பா ஆசிரியர் யார்? அவரைப் பற்றிய குறிப்புகளைத் தருக.

     

    அகலிகை வெண்பா என்னும் குறுங்காப்பிய ஆசிரியர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் 14.08.1857ஆம் ஆண்டு பழனியப்ப முதலியார்க்கு மகனாகப் பிறந்தார். அவர் 12.10.1946இல் இயற்கை எய்தினார்.

    கால்நடை மருத்துவப் பிரிவில் பணியாற்றியமையால் அது தொடர்பான ஆங்கில நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கால்நடைக்காரர் புத்தகம், இந்தியாவில் கால்நடைகளுக்குக் காண்கிற உயிரிழப்பு நோய்கள் ஆகியவை கால்நடைத் துறையில் பணியாற்றும் தமிழர்களின் நலன் கருதி மொழிபெயர்க்கப்பட்டவையாகும்.

    தமிழ் இலக்கியத் துறைக்கு வளம் சேர்க்கும் வகையில் ஆங்கிலக் கவிஞர் மில்டனின் Paradise Lost முதற்காண்டத்தைச் சுவர்க்க நீக்கம் என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தார். கோம்பி விருத்தம், நெல்லைச் சிலேடை வெண்பா, தனிக்கவிதைத் திரட்டு, கம்பராமாயண சாரம் என்பன வெ.ப.சுப்பிரமணிய முதலியாரின் மற்ற நூல்கள் ஆகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 15:56:36(இந்திய நேரம்)