தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.0 பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

    சென்ற பாடத்தில், பெயர்ச்சொற்களின் பொருள்களை வேறுபடுத்திக் காட்டும் வேற்றுமை பற்றிய செய்திகளை அறிந்தோம். வேற்றுமை எட்டு வகைப்படும் என்பதைத் தெரிந்து கொண்டோம். அவற்றுள் முதலாம் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை) முதல் நான்காம் வேற்றுமை வரையிலான நான்கு வேற்றுமைகளையும் அவற்றின் பொருள்களையும் பற்றிப் பார்த்தோம்.

    இனி, எஞ்சியுள்ள ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை (விளிவேற்றுமை) ஆகிய வேற்றுமைகள் பற்றிய செய்திகளை இப்பாடத்தில் அறிந்து கொள்வோம்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:53:36(இந்திய நேரம்)