Primary tabs
5.3 வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்
நாயக்கர் காலமான பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில்தான் ஐரோப்பியர், கிறித்தவ சமயத் தொண்டு செய்வதற்குத் தமிழகம் வந்தனர். இவர்களுள் தத்துவ போதகர், வீரமாமுனிவர், சீகன்பால்கு ஐயர், போப் ஐயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களுள் வீரமாமுனிவர் தமிழ் அகராதி அமைப்புக்கு வித்திட்டவர்; பேச்சு வழக்குச் சொற்களுக்கு இலக்கணம் வகுத்தவர்; அவற்றோடு தமிழில் சிறந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்த பெருமை அவரையே சாரும்.
மெய்யெழுத்துப் போலவே எ, ஒ என்னும் குறில் எழுத்துகள் இரண்டும் புள்ளி பெறும் என எழுத்து வரிவடிங்களைப் பற்றி இலக்கண நூல்களான தொல்காப்பியமும் நன்னூலும் குறிப்பிடுகின்றன. வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கம் என்னும் தம் நூலில் இவ்வரி வடிவங்களின் சில மாற்றங்களைக் குறிப்பிடுகின்றார்.
எ, ஒ என்னும் குற்றெழுத்துகளில் மேலே உள்ள புள்ளியை நீக்க வேண்டும்; ஏகாரத்துக்குக் கீழே காலிட வேண்டும்; ஓகாரத்துக்குச் சுழி தந்து எழுத வேண்டும் என்பவை அவர் செய்த மாற்றங்கள்.
பழைய விதிபுதிய மாற்றம்குறில்எ்,ஒ்எ,ஒநெடில்எ,ஒஏ,ஓ5.3.2 உயிர்மெய் - எகர ஒகர மாற்றம்
உயிர்மெய்க் குறில் எகர ஒகரங்களுக்குப் புள்ளி உண்டு என்பது பழைய இலக்கணவிதி. ஆனால், இவ்விதியை மாற்றி உயிர்மெய்க்குறில் எகர ஒகரங்களுக்கு ஒற்றைக் கொம்பையும் உயிர்மெய்நெடில் ஏகார ஓகாரங்களுக்கு இரட்டைக் கொம்பையும் அமைத்தார்.
பழைய விதி குறில் நெடில்புதிய மாற்றம் குறில் நெடில்எகர, ஏகாரம்கெகெ கேஒகர, ஓகாரம்கெ்ா கொகொ கோரகரத்திற்குக் கால் இட்டு மற்ற நெடில் குறியாகிய ‘ா’ காலிலிருந்து வேறுபடுத்தினார்.
பழைய வடிவம்புதிய வடிவம்ரகரம்ாரவீரமாமுனிவர் தமிழ் வரிவடிவில் செய்த இத்தகைய மாற்றம் இன்றும் நமக்குப் பயனுள்ளதாக விளங்கி வருகிறது.