தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05142-இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்

  • பாடம் - 2

    A05142 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் மொழி வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் பெற்றுள்ள மாற்றங்களை இப்பாடம் விளக்குகிறது. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் ஒலியன்களிலும் உருபன்களிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இப்பாடம் விளக்குகிறது. இதன்மூலம் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் நிலையை மதிப்பிடுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இருபதாம் நூற்றாண்டில் மொழி மாற்றம் பெறுவதற்கான காலச் சூழலை அறியலாம்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் அமைந்துள்ள ஒலியன்கள், புதிதாக வந்து சேர்ந்த ஒலியன்கள், ஒலியன்களின் வருகைமுறை, அவற்றில் நிகழ்ந்த மாற்றங்கள், மெய்ம்மயக்கங்கள் முதலியவற்றை அறியலாம்.
இருபதாம் நூற்றாண்டுப் பேச்சுத் தமிழில் நிகழ்ந்துள்ள ஒலி மாற்றங்களை விவரமாகத் தெரிந்து கொள்ளலாம்.
இக்காலத் தமிழில் நிலவும் பெயர்ப் பாகுபாடு; பெயரில் திணை, பால் காட்டும் விகுதிகள், உயர்வு ஒருமைப் பெயர்கள் முதலியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
கால இடைநிலைகள், துணைவினைகள் முதலியவற்றின் பங்கை அறியலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:09:24(இந்திய நேரம்)