தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05141-தமிழ் வரிவடிவ வளர்ச்சி

 • பாடம் 1

  A05141 தமிழ் வரிவடிவ வளர்ச்சி


  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  மொழி பேச்சுமொழி, எழுத்துமொழி என்று இரு கூறுகளாக இயங்குவதைச் சொல்கிறது. இந்த இரு கூறுகளிலும் காலம் தோறும் மாற்றங்கள் நிகழ்வதைக் கூறுகிறது. தமிழ் மொழியின் எழுத்து முறை பற்றி எடுத்துரைக்கிறது. காலம் தோறும் தமிழ் வரிவடிவம் அடைந்து வந்துள்ள வளர்ச்சி பற்றி விரித்து உரைக்கிறது. எழுத்துகளின் வடிவத்தில் செய்யப்பட்டுவரும் சீர்திருத்தங்கள் பற்றியும் சொல்கிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களையும் திறன்களையும் பெறலாம்

  தமிழ் மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப் பெறும் எழுத்து முறை பற்றி அறியலாம்.
  தமிழ் எழுத்து வடிவத்தின் தொன்மையை அறிந்து கொள்ளலாம். தமிழ் எழுத்துகள் தமிழி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என வடிவ மாற்றங்கள் பெற்றுள்ளதை அறியலாம். இவ்வாறு, இன்றைய தமிழ் எழுத்து வடிவம் வளர்ந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
  தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த எழுத்து முறைகளை அறியலாம்.
  காலம் தோறும் தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் நிகழ்ந்து வருவதையும் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:08:16(இந்திய நேரம்)