தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 2.0 பாட முன்னுரை

    தமிழ் இலக்கியத்தின் வடிவமும் உள்ளடக்கமும் காலந்தோறும் மாறி வந்துள்ளன. சங்ககாலம் தொடங்கி இன்று வரை எண்ணற்ற இலக்கிய வடிவங்களை - வகைமைகளைத் தமிழ்மொழி பெற்றுள்ளது. இந்த இலக்கிய வகைமைகளைச் சிற்றிலக்கியங்கள் எனும் பெயரால் இலக்கண நூல்கள் குறித்துள்ளன.

    இத்தகு சிற்றிலக்கிய வகையில் ஒன்றே பிள்ளைத்தமிழ். பிள்ளைத்தமிழ் இலக்கிய வகையாக உருவெடுத்த காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு என்பர். (கு. முத்துராசன், 1992). இதற்கு முன்பும் தமிழிலக்கியங்கள் பிள்ளைத்தமிழின் சில கூறுகளை வெளிப்படுத்தி உள்ளன.

    நண்பர்களே! இந்தப் பாடம் பிள்ளைத்தமிழ் பற்றிய பொது அறிமுகத்தை முதலில் கூறுகின்றது. இரண்டாவதாக மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலை அறிமுகம் செய்கிறது. இனிப் பாடப்பகுதிக்குள் செல்வோமா?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 10:00:10(இந்திய நேரம்)