தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 5.0 பாட முன்னுரை

    மொழிக்கு இறுதியில் வரும் என்று கூறப்பட்ட எழுத்துகள் இருபத்து நான்கு. அவற்றுள் குற்றியலுகரமும் ஒன்று. இது சொல்லின் இறுதியில் வல்லினமெய்கள் ஆறன் மேல் ஏறி வரும். குற்றியலுகரம் அதற்கு அயலே (அதற்குமுன்னதாக) உள்ள எழுத்தை அடிப்படையாகக் கொண்டு ஆறு வகைப்படும். புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம், வருமொழியின் முதலில் உயிர் வரும்போது, தான் ஏறியிருக்கும் மெய்யை விட்டு நீங்கும். இவற்றைக் கடந்த பாடத்தில் பார்த்தோம்.

    இப்பாடத்தில், ஆறுவகைக் குற்றியலுகரங்கள் ஒவ்வொன்றின் முன்னரும் வருகின்ற வல்லினம், அல்வழிப் பொருளிலும் வேற்றுமைப் பொருளிலும் இயல்பாகவும், மிக்கும் வருவது பற்றி நன்னூலார் கூறும் இலக்கண விதிகள் தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகின்றன. வேற்றுமையில் வரும் நெடில் தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் ஒற்று இடையில் மிக்கும், மிகாமலும் வருமொழிகளோடு புணரும் திறம் பற்றி நன்னூலார் பேசுகிறார். மேலும் வன்தொடர்க் குற்றியலுகரங்களாக அமைந்த திசைப்பெயர்கள் பற்றிய புணர்ச்சி விதிகளையும் அவர் குறிப்பிடுகிறார். இவையாவும் இப்பாடத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 10:16:54(இந்திய நேரம்)