தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புணர்ச்சியும் அதன் பாகுபாடும்

  • பாடம் - 1

    C02131 புணர்ச்சியும் அதன் பாகுபாடும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    புணர்ச்சி என்றால் என்ன என்பதை விளக்கிச் சொல்கிறது. புணர்ச்சியில் வரும் நிலைமொழி, வருமொழி ஆகியவற்றை விளக்குகிறது. தமிழ் இலக்கண நூலார் புணர்ச்சிக்கு முக்கிய இடம் தந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது. நன்னூலார் தரும் புணர்ச்சி விளக்கத்தைக் குறிப்பிடுகிறது. நன்னூலாரின் புணர்ச்சி விளக்கத்தின் வழி நின்று, புணர்ச்சியை எழுத்துகள், பதங்கள், பொருள், எழுத்து மாற்றம் என்னும் நான்குவகை அடிப்படையில் பாகுபடுத்தி, அவை ஒவ்வொன்றையும் தக்க சான்றுகளுடன் விளக்குகிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • புணர்ச்சி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

    • நிலைமொழி, வருமொழி என்பனவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    • தமிழ் இலக்கண நூலாசிரியர்கள் தொல்காப்பியரும் நன்னூலாரும் எழுத்ததிகாரத்தில் புணர்ச்சிக்குத் தந்துள்ள இடத்தை அறிந்து கொள்ளலாம்.

    • உயிர் ஈற்றின் முன் உயிர் வரல், உயிர் ஈற்றின் முன் மெய் வரல், மெய் ஈற்றின்முன் உயிர் வரல், மெய் ஈற்றின்முன் மெய் வரல் என்னும் புணர்ச்சி வகைகளை விளங்கிக் கொள்ளலாம்.

    • புணர்ச்சியில், ஓசை இனிமை, பொருள் தெளிவு ஆகியவை காரணமாகவே சொற்கள் இயல்பாகவும், விகாரப்பட்டும் அமைகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

     

புதுப்பிக்கபட்ட நாள் : 10-08-2017 10:09:40(இந்திய நேரம்)