தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எண்ணுப் பெயர்ப் புணர்ச்சி

 • பாடம் - 6

  C02136 எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும், நூறு, ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்களும் மற்ற எண்ணுப்பெயர்கள் எல்லாமும் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளதை எடுத்துச் சொல்கிறது. எண்ணுப்பெயர்கள் பெரும்பாலும் குற்றியலுகர ஈற்றுப் பெயர்களே என்பதைக் குறிப்பிட்டுச் சொல்கிறது. எண்ணுப்பெயர்கள் வருமொழியில் உள்ள எண்ணுப்பெயர்களோடும் பிறபெயர்களோடும் புணரும்போது அடையும் விகாரங்களை விரிவாக எடுத்துச் சொல்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • எண்ணுப்பெயர்களில் ஏழு, ஆயிரம் நீங்கலான பிற எண்ணுப்பெயர்கள் குற்றியலுகரங்களே என்பதை அறிந்து கொள்ளலாம்.
  • தமிழில் எண்ணுப்பெயர்கள் கூட்டல் முறையிலும், பெருக்கல் முறையிலும் அமைந்திருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
  • ஒன்று முதல் எட்டு வரையிலான எண்ணுப்பெயர்களுக்கு நன்னூலார் கூறும் பொதுப்புணர்ச்சி விதியை அறிந்து கொள்ளலாம்.
  • ஒன்று முதல் பத்து முடிய உள்ள எண்ணுப்பெயர்கள் ஒவ்வொன்றும், வருமொழியில் உள்ள எண்ணுப்பெயர்கள், பிறபெயர்கள் ஆகியவற்றோடு புணரும்போது அடையும் விகாரங்கள் பற்றி நன்னூலார் கூறும் சிறப்பு விதிகளை அறிந்துகொள்ளலாம்.
  • தொண்ணூறு, தொள்ளாயிரம் ஆகிய எண்ணுப்பெயர்கள் பற்றிய புணர்ச்சி விதியை அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 14:30:24(இந்திய நேரம்)