தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொதுப்புணர்ச்சி

 • பாடம் - 2

  C02132 பொதுப்புணர்ச்சி

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் எந்த எந்த எழுத்துகள் வரும் என்பது பற்றிச் சொல்கிறது.  உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும், குற்றியலுகரத்தையும் ஈறாகக் கொண்டிருக்கும் நிலைமொழிகள், மெல்லினம் மற்றும் இடையின மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு புணர்வதற்கு உரிய பொதுவான புணர்ச்சி விதியை விளக்கிச் சொல்கிறது.

  உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்களுக்கு முன்னும், வினாப்பெயர், விளிப்பெயர்களுக்கு முன்னும், முன்னிலை வினை, ஏவல்வினைகளுக்கு முன்னும் வல்லின மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து புணர்வதற்கு உரிய பொதுவான புணர்ச்சி விதிகளையும் விளக்கிச் சொல்கிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  மொழிக்கு இறுதியிலும், முதலிலும் வரும் எழுத்துகள் எவை என்பதைப் பற்றி மீண்டும் அறிந்து கொள்ளலாம்.

  உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் இறுதியாகக் கொண்ட நிலைமொழிகள், மெல்லினத்தையும் இடையினத்தையும் முதலாகக் கொண்ட வருமொழிகளோடும், வல்லினத்தை முதலாகக் கொண்ட வருமொழிகளோடும் புணர்வது பற்றிய பல்வேறு பொதுப்புணர்ச்சி விதிகளை அறிந்து கொள்ளலாம்.

  பொதுப்பெயர் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 12:03:58(இந்திய நேரம்)