தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வினாப் பெயர், விளிப்பெயர் முன் வல்லினம்

  • 2.4 வினாப்பெயர், விளிப்பெயர் முன் வல்லினம்

    சொல்லின் ஈற்றில் வருகின்ற ஆ,ஏ,ஓ என்னும் மூன்று வினா எழுத்துகளுக்கு முன்னும், யா என்னும் வினாப்பெயருக்கு முன்னும், விளிவேற்றுமை ஏற்ற பெயர்களுக்கு முன்னும் வரும் வல்லினம் இயல்பாகும்.

    ஈற்றுயா வினா விளிப்பெயர் முன் வலி இயல்பே - (நன்னூல், 160)

    சான்று :

    அவனா + தந்தான் = அவனா தந்தான் ?
    அவனே + தந்தான் = அவனே தந்தான் ?
    அவனோ + தந்தான் = அவனோ தந்தான் ?

    யா + தந்தான் = யா தந்தான் ? (எது தந்தான் ?)

    தம்பீ + தா = தம்பீ தா
    தோழீ + தா = தோழீ தா

புதுப்பிக்கபட்ட நாள் : 14-08-2017 17:30:36(இந்திய நேரம்)