Primary tabs
-
பாடம் - 1
C03121 காப்பியங்கள் காட்டும் தமிழர் பண்பாடு
இந்தப் பாடம் என்ன சொல்கிறது ?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐந்து காப்பியங்களின் கதைகள் என்ன சொல்கின்றன என்பதை இப்பாடம் எடுத்துக் கூறுகின்றது. இக்கதைகள் வழியாகவும், இக்காப்பிய நூல்களின் கவிதைகள் வழியாகவும் வெளிப்படும் தமிழர் பண்பாட்டை இப்பாடம் விளக்கிக் காட்டுகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
ஐம்பெருங்காப்பியங்களின் கதைகளை அறியலாம்.
-
காப்பிய ஆசிரியர்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
-
காப்பியங்கள் காட்டும் வாழ்க்கைப் பண்பை அறிந்து கொள்ளலாம்.
-
பண்பாட்டு நெறியில் சங்க காலத்திற்குப் பின்பு நிகழ்ந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளலாம்.
-