Primary tabs
-
பாடம் - 5
C03125 சமண பௌத்த சமயங்கள் வளர்த்த
பண்பாடுஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தியாவின் வடபகுதியில் தோன்றிய சமண பௌத்த சமயங்கள் தமிழ்நாட்டில் எவ்வாறு மக்களுடைய மதிப்பைப் பெற்றன என்பதை இப்பாடம் தெரிவிக்கின்றது. இவ்விரு சமயங்களின் அடிப்படைக் கொள்கைகள், தமிழர்கள் வாழ்வில் இவை ஏற்படுத்திய மாற்றங்கள், இவை வளர்ந்ததற்கான சூழ்நிலைகள், இவை மக்களிடையே படிப்படியாக மதிப்பிழந்த நிலைக்கான காரணங்கள் ஆகியவற்றை இந்தப் பாடம் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
வைதிக சமயத்திற்கு மறுப்பாக எழுந்த சமயங்கள் சமணமும் பௌத்தமும் என்று அறியலாம்.
இவை கொல்லாமை முதலிய அறங்களை வலியுறுத்தின. அதனால் தமிழ்நாட்டில் உணவுப் பழக்கங்களில் ஒரு மாற்றம் உண்டாயிற்று என்பதை அறிந்து கொள்ளலாம்.
இவ்விரு மதங்களினால் ஈர்க்கப்பட்டுப் பலர் மதம் மாறினர் என்பதையும், மதக்கருத்துகளையும் சடங்குகளையும் பின்பற்றினர் என்பதையும் அறியலாம்.
-
இரு சமயத்தினரும் மக்களுக்கு மருத்துவம், கல்வி முதலியவற்றை வழங்குவதில் முன்நின்றனர் என்பதையும், காப்பியம், இலக்கணம் என்ற துறைகளில் பல நூல்களை இயற்றித் தமிழ்த் தொண்டாற்றினர் என்பதையும் தெரிந்து மகிழலாம்.
-