Primary tabs
பாடம் - 6
C03126 இசுலாம் கிறித்துவம் வளர்த்த பண்பாடு
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
தமிழகத்தில் இசுலாம் நுழைந்தது, தமிழர்களால் இச்சமயம் தழுவப்பெற்றது, இசுலாமியர் படைத்த புதிய இலக்கியங்கள், இசுலாமியரின் பண்பாட்டு நூல்கள், தமிழகத்தில் கிறித்துவம் புகுந்தமை, அயல் நாட்டுக் கிறித்துவரும் உள்நாட்டுக் கிறித்துவரும் ஆற்றிய பணிகள், இசுலாம், கிறித்துவம் ஆகிய சமயங்கள் தமிழ்நாட்டுப் பண்பாட்டு வளர்ச்சியில் பெற்ற பங்கு ஆகியவற்றை இந்தப் பாடம் எடுத்துரைக்கின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
வெளிநாட்டுச் சமயங்களான இசுலாமும் கிறித்தவமும் தமிழகத்துக்கு வந்த முறையை அறியலாம்.
-
அச்சமயங்களின் கொள்கைகளால் ஈர்க்கப் பெற்ற தமிழர் அம்மதங்களுக்கு மாறினர் என்பதையும், அச்சமயக் கருத்துகளை வெளியிடப் பழந்தமிழ் இலக்கிய வகைகளையே பயன்படுத்தினர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
-
இசுலாமியர் கிஸ்ஸா, மசலா, நாமா முதலிய புதிய இலக்கிய வகைகளை அறிமுகப்படுத்தினர் என்பதை அறியலாம்.
-
கிறித்துவப் பாதிரிமார் தம் சமயத் தொண்டோடு தமிழ் மொழித் தொண்டும் சமூகத் தொண்டும் செய்தனர் என்பதை அறிந்து மகிழலாம்.
-
இன்றைய உரைநடை, சிறுகதை, நாவல் முதலியவற்றை மேல்நாட்டினரே அறிமுகப்படுத்தினர்; அகராதிக் கலையை வளர்த்தனர்; பிற மொழிகளோடு ஒப்பிட்டுக் காட்டி, தமிழின் சிறப்பை வெளிப்படுத்தினர் என்பது போன்ற செய்திகளை அறிந்து வியந்து போற்றலாம்.
-