Primary tabs
பாடம் - 3
C03123 அறநூல்கள் வளர்த்த பண்பாடு
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
மனிதனைப் பண்புள்ளவனாக ஆக்குவதற்கு அறநூல்கள் பயன்படுகின்றன. வாழ்க்கையில் கொள்ளத்தக்கன எவை, தள்ளத்தக்கன எவை என்று இந்நூல்கள் கற்பிக்கின்றன. நல்லது தீயதைப் பகுத்துக் கூறுகின்றன. அறநெறி நிற்பதால் வரும் பயன்களையும், அறமல்லாத தீநெறிச் செல்வதால் விளையும் கேடுகளையும் அறநூல்கள் எடுத்துரைக்கின்றன.
வாழ்க்கைக்கு உறுதி சேர்ப்பது அறம். தமிழ் நூல்கள் காட்டும் அறக்கொள்கைகள் தமிழரின் பண்பாடு எவ்வளவு சிறப்புடையது என்பதைக் காட்டுகின்றன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
சமூகம் நல்ல நிலையில் இயங்க நீதிநூல்கள் தேவை என்பதை அறியலாம்.
-
நீதி நூல்கள் பண்பாட்டின் ஒழுக்கநெறி வரையறைகளை வகுத்துத் தருகின்றன என்பதை அறியலாம்.
-
நீதி நூல்களில் ஒன்றாகிய திருக்குறள் கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துவதைத் தெரிந்து கொள்ளலாம்.
-
பிற்கால நீதிநூல்களும் பண்பாட்டைக் காக்கும் வகையில் அமைந்துள்ளதை அறியலாம்.
-