தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.0 பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    ஒரு பண்பாட்டின் சிறப்பு அதன் ஒழுக்கநெறி வரையறை - எவற்றைக் கொள்ள வேண்டுமென்றும், எவற்றைத் தள்ள வேண்டுமென்றும் பகுத்துணர்ந்து நடந்து கொள்வதே என்று விளக்கம் கூறுவர் அறிஞர். மனிதன் பிற மனிதர்களோடு முரண்படாமலும், தன் அறிவை இழந்து விடாமலும், சமூக ஒப்புரவுக்கு மாறாகத் தனி மனித நிலையை வேறுபடுத்தாமலும், வாழ்க்கை மெய்ம்மைகளை உணர்ந்து கொண்டு அவற்றைப் புறக்கணிக்காமலும் வாழும் வாழ்க்கை நெறியை ஒவ்வொரு மொழியிலும் அற நூல்கள் கற்பிக்கின்றன. பொருள் தேடுதலே வாழ்க்கை, இன்பம் துய்த்தலே வாழ்க்கை என்ற நிலைகள் வாழ்க்கையின் உயிர்ப்பை இழந்துவிடச் செய்யும் எனக் கருதியது தமிழினம். எனவே பல அற நூல்களைத் தமிழ்ச் சான்றோர் இயற்றினர். இந்நூல்கள் காட்டும் பண்பாட்டை இங்குக் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:48:53(இந்திய நேரம்)