Primary tabs
பாடம் - 4
C03124 சைவ வைணவச் சமயங்கள் வளர்த்த
பண்பாடுஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தியா பல சமயங்களை உருவாக்கிய ஒரு நாடு. இச்சமயங்களில் சைவம், வைணவம் ஆகிய இரண்டும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் வளர்ந்தவை. சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் பக்தி இயக்கத்தின் முன்னோடிகள் ஆகத் திகழ்கின்றனர். இவர்களைப் பற்றியும், தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கத்தில் இவர்களுக்கு உரிய பங்களிப்பைப் பற்றியும் இந்தப் பாடம் விரிவாகக் கூறுகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
பக்தி இயக்கத்தைச் சைவ வைணவச் சமயங்கள் வளர்த்தன என்பதை அறியலாம்.
-
சாதி பேத மற்ற சமுதாயத்தை உருவாக்க இவ்விரு சமயங்களும் பாடுபட்டன என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.
-
சமயங்கள் பெண்மையைப் போற்றியதைப் பற்றி அறியலாம்.
-
இறையன்பு என்னும் அடிப்படையில் ஒரு புதிய சமுதாயம் உருவாகச் சமயங்கள் ஆற்றிய தொண்டைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
-
திருமுறைகளும் திவ்வியப் பிரபந்தமும் காட்டும் பண்பாட்டுக் கூறுகளை மகிழலாம்.
-