Primary tabs
6.6 தொகுப்புரை
இசுலாம், கிறித்துவம் என்ற இரு புது நெறிகள் தமிழகத்தில் தோன்றித் தமிழர்களைக் கவர்ந்தன. இசுலாமியரும் கிறித்துவரும் எங்கிருந்தோ மொத்தமாக யவனரைப் போலவும் மங்கோலியரைப் போலவும் குடியேறியவர்கள் இல்லை. இங்கு வாழ்ந்த தமிழரே அச்சமயங்களைத் தழுவினர். எனவே பண்பாட்டு நெறிகளில் அடிப்படை மாற்றங்கள் நிகழவில்லை. இச்சமயம் சார்ந்தவர்களால் தமிழ் நல்ல வளர்ச்சியடைந்தது. புதிய புதிய இலக்கிய வடிவங்களும், கற்பனைகளும் வளர்ந்திருக்கின்றன என்று கூறலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
-
இசுலாத்திற்கும் ஏனைத் தமிழகச் சமயங்களுக்கும் இடையே அமைந்த ஒற்றுமைகளை எழுதுக.
-
இசுலாம் இந்து சமயமும் நல்லிணக்கமாய் வாழ்ந்த நிலையைக் காட்டுக.
-
தமிழை இசுலாமியர் வளர்த்த பாங்கை எடுத்துரைக்க.
-
கிறித்துவர்களின் பண்பாடு தமிழரிடையே உண்டாக்கிய புதுமைகளை எழுதுக.
-
சமய நல்லிணக்கத்தைக் கிறித்துவர்களும் மற்றவர்களும் வளர்த்த நெறியைப் புலப்படுத்துக.
-